Will this year's films cross 300? - Kollywood list to be released! Google
சினிமா

300ஐ கடக்குமா இந்த ஆண்டு படங்கள் : வெளியாகும் கோலிவுட் லிஸ்ட்!

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு மட்டும் எத்தனை படங்கள் வெளிவந்துள்ளது எனவும், 300 -ஐ கடக்குமா இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் என்று சினிமா பிரியர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Baala Murugan

சினிமா எண்ணிக்கை

2025 Movies Released & Upcoming Films List : சினிமாவை பொறுத்தவரை ஒரு பொழுதுபோக்கை தாண்டி, பலரின் வாழ்க்கையை புரட்டி போடும் ஒரு சகாப்தமாகவே அது அமைந்துள்ளது. இதனால், அதற்கு தன்னை அர்பணிக்காதோர் யாரும் இருக்க முடியாது.

சினிமாவே பிடிக்காது என்று கூறுபவராக இருந்தாலும், அவர் தனது வாழ்க்கை என்னும் சினிமாவில் ஒரு நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுதான் இருப்பார். அப்பேர்பட்ட சினிமா உலக சினிமா, மொழி சினிமா, காட்சி சினிமா, ஊடக சினிமா என பலவகையில் பரிணாமம் கொள்கிறது.

அப்படி பார்க்கையில், கடந்து வரும் ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு ஆஸ்கார்கள், சிறப்பு நடிகர்கள் என்று பல்வேறு பட்டங்கள் பல பெயர்களிள் சினிமாவில் பலருக்கும், பல படத்துக்கும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு எத்தனை படங்கள் வெளிவந்துள்ளது, இன்னும் இந்த ஆண்டு முடிவிற்கு 3 வாரங்கள் உள்ள நிலையில், எத்தனை படங்கள் வெளிவரும் இந்த ஆண்டு மொத்தம் தமிழ் சினிமாவில் எத்தனை படங்கள் என பார்ப்போம்.

2025 ஆம் ஆண்டின் படங்கள்

2025ம் ஆண்டின் கடைசி மாதத்தில் நுழைந்துவிட்டோம். கடந்த வாரத்துடன் முடிவடைந்த நவம்பர் மாதத்தில் வெளியான தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 250ஐக் கடந்தது. எந்த ஒரு வருடத்திலும் இல்லாத அளவிற்கு ஒரு வருடத்தின் 11 மாதங்களில் இவ்வளவு படங்கள் வெளியானது இதுவே முதல் முறை.

300 சினிமாக்களை கடக்குமா இந்த ஆண்டு

இந்த வருடம் முடிய இன்னும் நான்கு வாரங்கள் உள்ளன. அந்த நான்கு வார வெளியீட்டு நாட்களில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்து, இந்த வருட மொத்த வெளியீட்டில் 300ஐக் கடந்து மீண்டும் ஒரு சாதனையைப் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அது நடக்கும் என்ற விதத்தில் இந்த வாரத்திலும் வழக்கம் போல ஐந்தாறு படங்கள் வெளியாக உள்ளன. “அங்கம்மாள், கேம் ஆப் லோன்ஸ், லாக் டவுன், சாரா, (சாவீ)சாவு வீடு, நிர்வாகம் பொறுப்பல்ல,” உள்ளிட்ட படங்கள் இந்த வாரம் டிசம்பர் 5ல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆண்டின் கடைசியில் எப்பொழுதும் படங்கள் வரும்

எப்போதுமே வருடத்தின் கடைசி மாதங்களில் அதிகமான படங்கள் வெளியாவது வழக்கம். அதனால், அடுத்த மூன்று வாரங்களில் வெளியாக உள்ள படங்களின் அறிவிப்புகள் இன்னும் சில வாட்களில் அந்தந்த படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடுவர்.

இந்நிலையில், இதுவரை வந்துள்ள படங்கள் 300 ஐ தொடவுள்ள நிலையில், நிச்சயம் இதன்பிறகு வெளிவரவுள்ள படங்கள் 300ஐ நெருங்குமா, 300ஐக் கடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

====