நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ்
திரைத்துறையில் ஒரு வாரிசு நடிகராக அறிமுகமாவது எளிது, ஆனால் ஒரு திறமையான இயக்குநராகவும் நடிகராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்வது பெரும் சவால். அந்த சவாலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார் நடிகரி கருணாசின் மகன் கென் கருணாஸ்.
கென் கருணாஸின் யூத் திரைப்படம்
கென் கருணாஸ் அவர் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான யூத் திரைப்படம், திரையரங்குகளைத் தொடர்ந்து தற்போது ஓடிடி தளத்திலும் புதிய சாதனைகளைத் தொடர்ந்து வருகிறது.
வசூலில் சாதனை
மிகவும் குறைந்த முதலீட்டில் ஒரு நேர்த்தியான கதையம்சத்தோடு உருவான யூத் திரைப்படம், உலகளவில் 82 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிறிய பட்ஜெட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி
சிறிய பட்ஜெட் படங்கள் நல்ல உள்ளடக்கம் இருந்தால் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பதற்கு இந்தப் படம் ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.
நெட்பிளிக்ஸ் ட்ரெண்டிங்கில் அதிரடி
திரையரங்குகளில் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து, இப்படம் சில நாட்களுக்கு முன்பு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
இரண்டாம் இடத்தில் யூத்
இத்திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே , இந்திய அளவிலான டாப் ட்ரெண்டிங் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
பவன் கல்யாண் படத்தை பின்னுக்குத் தள்ளிய யூத்
இதில் வியப்பிற்குரிய விஷயம் என்னவென்றால், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான பவன் கல்யாண் நடிப்பில் வெளியான உஸ்தாத் பகத் சிங் திரைப்படத்தையே பின்னுக்குத் தள்ளி யூத் முன்னேறியுள்ளது.
ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற யூத்
ஒரு இளம் கலைஞரின் படம், ஒரு மாபெரும் சூப்பர் ஸ்டாரின் படத்தைக் காட்டிலும் அதிக பார்வைகளைப் பெறுவது இணையவாசிகள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
குவியும் பாராட்டுகளும் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டியும்
இயக்கம், நடிப்பு என இரண்டிலும் முத்திரை பதித்துள்ள கென் கருணாஸை ஒப்பந்தம் செய்ய, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது.
வர்த்தக ரீதியாக, விமர்சன ரீதியாக வெற்றி
தனது முதல் படத்திலேயே வர்த்தக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிக் கொடியை நாட்டியுள்ளதால், அவரது அடுத்த படைப்பு குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
கென்னுக்கு குவியும் பாராட்டு
தனித்துவமான உழைப்பால் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி, இன்று ஒரு வெற்றிகரமான இயக்குநராக உருவெடுத்துள்ள கென் கருணாஸிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
===