Why was the autopsy conducted so quickly? Dear Ramadoss! கரூரில் நடைபெற்ற தவெகவின் பிரச்சார கூட்டத்தில் பலரும் உயிரிழந்த நிலையில், தனி விசாரணை குழு அமைத்தல், சம்பவம் குறித்த புரளிகள், உண்மை மற்றும் விமர்சனங்கள் உட்பட அனைத்து கருத்துகளும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.இந்நிலையில் இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பல தரப்பட்ட கேள்விகளை எழுப்பி உள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி
கரூரில் தவெகவின் பிரச்சார கூட்டத்தில் நடந்த மாபெரும் கோரத்தால், தமிழ்நாட்டில் மாபெரும் விமர்சனங்கள் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் உண்மை தன்மையை கண்டறியும் வகையில், பத தரப்பட்ட முயற்சிகள் பலரால் மேற்கொள்ளப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தின்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
உண்மை நிலையை கண்டறிய வேண்டும்
அப்போது அவர் கூறியதாவது: கரூர் சம்பவம் தொடர்பாக நிறைய வதந்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. அதன் உண்மைநிலை வெளிவர வேண்டும். நியாயமான முறையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும். கரூர் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் முழுமையான விசாரணையை நடத்த வேண்டும்.
உடற்கூராய்வு, எதற்கு அவசரம்
உடற்கூராய்வை அவசரமாக நடத்தியது ஏன் எனவும் ஒரு சம்பவம் தொடர்பாக நிறைய வதந்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. நியாயமான முறையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் இறந்தவர்களை இன்னும் சந்திக்கவில்லை என்றும் இதற்கு காரணம் என்ன என்று பலரும் விஜய் மற்றும் தவெகவை விமர்சித்து வரும் நிலையில் இதன் முழு உண்மை வெளிவர வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பியும், தங்களது ஆதரவுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
===========