SC ST Commission Investigation on Nella Kavin Selva Ganesh Murder Case 
தமிழ்நாடு

ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கு - தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் விசாரணை

Nellai Kavin Murder Case : திருநெல்வேலியில் இளைஞர் கவின் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணைய தலைவர் திரு. கிஷோர் மக்வானா தலைமையிலான குழுவினர் இன்று விசாரணை மேற்கொண்டனர்.

Ramani

Nellai Kavin Murder Case Update : திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் கடந்த மாதம் 27-ம் தேதி ஐடி ஊழியர் கவின் குமார் கணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட்டார். மாற்று சமூகப் பெண்ணை காதலித்து வந்ததால் அப்பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரால் படுகொலை செய்யப்பட்டார்.

கவின் குமார் கணேஷ் கொலை வழக்கு :

சுர்ஜித்தின் பெற்றோர்கள் தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் உதவி ஆய்வாளர்காளக பணியாற்றி வருகின்றனர். கவின் குமார் கணேஷ் கொலை வழக்கு(Kavin Murder Case) பதிவு செய்யப்பட்டதால் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சுர்ஜித்தின் தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

தேசிய ஆதிதிராவிட ஆணையம் விசாரணை :

இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்துவரும் நிலையில், தேசிய ஆதிதிராவிட ஆணையத் தலைவர் திரு. கிஷோர் மக்வானா தலைமையிலான உறுப்பினர்கள் ஆறுமுகமங்கலத்தில் உள்ள கவின் குமார் கணேஷ்-ன் பெற்றோரிடம் நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

மேலும் படிக்க : நெல்லை ஆணவப் படுகொலை : வழக்கை மூடி மறைக்க முயலும் காவல்துறை

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்(Tirunelveli Collector Office) அலுவலத்தில் இந்த கவின் குமார் கணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட்ட விவகாரம்(Nellai Kavin Honour Killing) தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுகுமார், காவல்துறை உயர் அதிகாரி சாமூண்டிஸ்வரி, திருநெல்வேலி காவல்துறை ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி உட்பட அரசு அலுவர்கள் பலர் கலந்து கொண்டனர்.