ரயில்வேயில் 2,569 பணியிடங்கள்
Indian Railways Recruiments 2025 : இந்திய ரயில்வேயில் இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. நாடு முழுவதும் மொத்தம் 2,569 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வேயில் 160 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நேரடி நியமனம்
இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நவம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
காலி பணியிடங்கள்
Junior Engineer, Depot Material Superintendent, Chemical & Metallurgical Assistant என காலியிடங்களின் எண்ணிக்கை 2,569 ஆக இருக்கிறது.
கல்வித் தகுதி
சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ அல்லது டிகிரி படித்திருக்க வேண்டும். இன்ஜினியரிங் படித்தவர்களும் விண்ணப்பிக்க தடையில்லை.
வயது மற்றும் தகுதி
01.01.2026 அன்று கணக்கின்படி 18 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
மாத ஊதியம் ரூ. 35,400
இந்தப் பணியிடங்களுக்கு 2 நிலைகளில் தேர்வு நடத்தப்படும். முதல்நிலை கணினி வழித் தேர்வில் தகுதி பெற்றவர்கள் இரண்டாம் நிலை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரண்டாம் நிலை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2025 ஆகும்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்ப கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்கள் ரூ. 250 செலுத்தினால் போதும். காலி பணியிடங்கள்த தொடர்பாக மேலும் விவரங்களை அறிய https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிட்டு தேவையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
==============