DD Tamil News Job Vacancy Apply Online 2025 in Tamil : டிடி தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள அறிவிக்கையில் மொத்தம் 10 பணிகளுக்காக பணியாளர்கள் தேவை என்று குறிப்பிட்டுள்ளது. தமிழ் செய்திவாசிப்பாளர்,செய்தியாளர், உதவி செய்தி ஆசிரியர், ஒளிப்பதிவாளர், உதவி ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட பணிகளுக்கு தினசரி தேவை அடிப்படையிலான தற்காலிக பணியாளர்கள் தேர்வு(Temporary Job Vacancy) செய்யப்பட உள்ளனர்.
இந்தப்பணிகளுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை DD Tamil News இன் எக்ஸ் மற்றும் பேஸ்புக் பக்கங்களை பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆம் தேதி இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியான 15 நாள்களுக்குள் careerddtamilnews@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.