15-year-old Vaibhav Suryavanshi has been named in the Indian cricket team for the Asian Games google
விளையாட்டு

Asian Games Cricket : ஆசிய போட்டிக்கான இந்திய அணி, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் : முதன்முறையாக ”இளம்புயல் வைபவ் சூர்யவன்ஷி”!

ஆசிய விளையாட்டு போட்டி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

Kannan

ஆசிய விளையாட்டு போட்டி

Asian Games 2026: Vaibhav Sooryavanshi and a new skipper headline Indian cricket team. Shreyas Iyer will captain the Indian men’s cricket team

ஆசிய விளையாட்டு போட்டி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

ஆசிய விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை ஜப்பானில் உள்ள ஐச்சி - நகோயா நகரில் நடைபெற உள்ளன.

இந்தத் தொடரில் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பங்கேற்கிறது. டி20 ஃபார்மெட்டில் இந்த கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

உத்தேச அணியில் சூர்யவன்ஷி

தொடருக்கான உத்தேச இந்திய கிரிக்கெட் அணி கடந்த மாதம் வெளியான நிலையில் 30 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். அதில் வைபவ் சூர்யவன்ஷிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது.

இந்திய அணி அறிவிப்பு

இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டி 2026-க்கான 15 வீரர்கள் அடங்கிய இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு

ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளார். இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய சீனியர் அணியில் விளையாடும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் ஜொலித்த சூர்யவன்ஷி

ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசனில் 16 இன்னிங்ஸில் 776 ரன்களை சேர்த்திருந்தார் வைபவ் சூர்யவன்ஷி. இதன்மூலம் இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் ஆனார். இந்த சீசனில் மொத்தம் 72 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார்.

ஆசிய விளையாட்டு போட்டி தொடருக்கான இந்திய அணி :

ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்)

அபிஷேக் சர்மா

சஞ்சு சாம்சன்

இஷான் கிஷன்

ஷிவம் துபே

திலக் வர்மா (துணை கேப்டன்)

நிதிஷ் குமார் ரெட்டி

அக்சர் படேல்

வாஷிங்டன் சுந்தர்

வருண் சக்கரவர்த்தி

ரவி பிஷ்னோய்

ஹர்ஷித் ராணா

அர்ஷ்தீப் சிங்

பும்ரா

வைபவ் சூர்யவன்ஷி

=======