Commonwealth Games 2026 Starts in Glasgow today :
விளையாட்டு உலகில் மிகப்பெரிய திருவிழாவாகக் கருதப்படுவது ஒலிம்பிக் போட்டி. இதற்கு அடுத்த விழாவாகப் பார்க்கப்படுவது காமன்வெல்த் போட்டி ஆகும்.
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான போட்டி ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் நடைபெற இருந்தது. ஆனால் அதிக செலவினத்தை காரணம் காட்டி ஆஸ்திரேலியா பின்வாங்கி விட்டது.
பிரிட்டனில் காமன்வெல்த் திருவிழா
எனவே, 23ஆவது காமன்வெல்த் விளையாட்டுத் திருவிழா 4வது முறையாக ஸ்காட்லாந்தில் நடைபெற இருக்கிறது.
3,000 வீரர்கள் பங்கேற்பு
இந்த போட்டியில், 72 காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 தடகள வீரர்கள் போட்டியில் பங்கேற்கவுள்ளனர். இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடக்க விழா நடைபெறுகிறது.
மீராபாய் சானு தலைமை
இந்திய அணிக்கு பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார்.
ஆகஸ்ட் 2ம் தேதி வரை போட்டிகள் நடைபெற இருக்கிறது.
காமன்வெல்த் விளையாட்டை அதிக முறை நடத்திய நாடுகளுக்கான பட்டியலில் 2ஆவது இடத்தை கனடாவுடன் (1930, 1954, 1978, 1994) பகிர்ந்து கொண்டது ஸ்காட்லாந்து.
இரு அணிகளும் தலா 4 முறை இப்போட்டியை நடத்தின. முதலிடத்தில் ஆஸ்திரேலியா (5 முறை, 1938, 1962, 1982, 2006, 2018) உள்ளது.
புதிய நாடுகள் களமிறங்குகின்றன
கபான், டோகோ நாடுகள் கடந்த 2022இல் காமன்வெல்த் அமைப்பில் இணைந்ததைத் தொடர்ந்து, தற்போது முதன்முறையாக காமன்வெல்த் விளையாட்டில் களமிறங்குகின்றன.
செலவு ரூ.2,000 கோடி
இந்த போட்டிக்கு ஸ்காட்லாந்து ரூ.2 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது செலவினம் 60 சதவீதம் குறைவாகும்.
இதில் தடகளம், பளுதூக்குதல், குத்துச்சண்டை, நீச்சல், கூடைப்பந்து (3×3), ஜிம்னாஸ்டிக்ஸ், சைக்கிளிங், ஜூடோ, நெட்பால், பவுல்ஸ் ஆகிய 10 விளையாட்டுகளில் 215 பந்தயங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பாரா பிரிவினருக்கான 6 பந்தயங்களும் அடங்கும்.
இந்தியா சார்பில் 126 பேர் பங்கேற்பு
இந்தியா சார்பில் 78 வீரர்கள், 48 வீராங்கனைகள் என மொத்தம் 126 பேர் கொண்ட அணி 8 விளையாட்டுகளில் களம் காணுகிறது.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, பளு தூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு, குத்துச்சண்டை வீராங்கனை லவ் லினா மற்றும் ஜாஸ்மின் லம்போரியா, பிரீத்தி பவார்..
தமிழகத்தின் விஷால், உயரம் தாண்டுதல் வீரர் சர்வேஷ் குஷாரே, நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கர், குண்டு எறிதல் வீரர் தேஜிந்தர் பால் சிங், வட்டு எறிதல் வீராங்கனை சீமா கலிரம்மா...
ஜூடோ வீராங்கனை துலிகா மான் உள்ளிட்டோர் பதக்கம் வெல்லும் வாய்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
2022ல் இந்தியா 4வது இடம்
2022ம் ஆண்டு போட்டியில் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என 61 பதக்கங்களை அறுவடை செய்து 4-ஆவது இடத்தைப் பிடித்தது.
சில போட்டிகள் நீக்கம்
கடந்த முறை இடம்பெற்றிருந்த பேட்மிண்டன், கிரிக்கெட், ஹாக்கி, டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ், மல்யுத்தம் உள்ளிட்ட விளையாட் டுகள் இந்த சீசனில் இல்லை.
எனவே, இந்தியாவின் பதக்க வேட்டைக்குப் பாதிப்பு உண்டாகியுள்ளது. இதேபோல் தொடர்ந்து 2-ஆவது முறையாக துப்பாக்கி சுடுதலுக்கும் இடம் மறுக்கப்பட்டுள்ளது.
=================