Abhishek Sharma's brilliant performance helped the Indian team to a resounding victory in the first T20I against New Zealand 
விளையாட்டு

T20: விளாசிய அபிஷேக், வேட்டையாடிய இந்தியா : சுருண்ட நியூசிலாந்து

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால், இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

Kannan

இந்தியா - நியூசிலாந்து முதல் டி20 போட்டி

Abhishek Sharma’s explosive 84 off 35 balls, India triumphed over New Zealand by 48 runs in the first T20I : இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் நியூசிலாந்து அணி, 5 ஆட்டங்​கள் கொண்ட டி20 கிரிக்​கெட் தொடரில் விளையாடுகிறது. இதில், முதல் போட்டி நாக்பூரில் நடை​பெற்​றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி​யின் கேப்​டன் மிட்​செல் சாண்ட்​னர் பீல்​டிங்கை தேர்வு செய்ய, இந்தியா பேட்டிங் செய்தது.

அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா

அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா, தனது 7வது அரை சதத்தை கடந்தார். 35 பந்துகளில், 8 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 84 ரன்​கள் விளாசி​மைதானத்தில் தீபாவளி கொண்டாடினார்.

சூர்யகுமார், பாண்டியா அபாரம்

அவருக்கு பக்கபலமாக கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் 22 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 4 பவுண்​டரி​களு​டன் 32 ரன்​களும், ஹர்​திக் பாண்​டியா 16 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 3பவுண்​டரி​களு​டன் 25 ரன்​களும் சேர்த்​தனர்.

ரிங்கு சிங் அதிரடி

இறு​திக்​கட்ட ஓவர்​களில் ரிங்கு சிங் அதிரடி​யாக விளையாடி 20 பந்துகளில், 3 சிக்​ஸர்​கள், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்​கள் விளாசி​னார். 238 ரன்களை குவித்தது இந்திய அணி

44வது முறை 200 ரன்கள்

சர்​வ​தேச டி20 கிரிக்​கெட்​டில் இந்​திய அணி 200 ரன்​களுக்கு மேல் குவிப்​பது இது 44வது முறை​யாகும். நியூஸிலாந்​துக்கு எதி​ராக மட்டும் 5வது முறை​யாக 200 ரன்​களுக்கு மேல் வேட்​டை​யாடி உள்ளது.

நியூசிக்கு 239 ரன்கள் இலக்கு

239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நியூஸிலாந்து அணி விரட்டியது. முதல் இரண்டு ஓவர்களில் கான்வே (0) மற்றும் ரச்சின் ரவீந்திரா (1) ஆட்டமிழந்தனர்.

கிளென் பிலிப்ஸ் 78 மற்றும் மார்க் சாப்மேன் 39 ரன்கள் எடுத்தனர். மிட்செல் 28, ராபின்சன் 21 மற்றும் சான்ட்னர் 20 ரன்கள் எடுத்தனர்.

190 ரன்களில் சுருண்ட நியூசி

அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 48 ரன்களில் வெற்றி பெற்றது.

ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா

இந்திய அணி சார்பில் வருண் மற்றும் ஷிவம் துபே தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் தாள் 1 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை அபிஷேக் சர்மா வென்றார்.

===================