உலகக்கோப்பை கால்பந்து தொடர்
The 2026 FIFA World Cup final features historically high ticket prices, setting records as the most expensive event in U.S. sporting history :
உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டி யாருக்கு கோப்பை என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்களை காத்திருக்க வைத்துள்ளது. அமெரிக்காவின் மெட்லைஃப் ஸ்டேடியத்தில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது.
இறுதிப்போட்டி அர்ஜென்டினா vs ஸ்பெயின்
நடப்பு சாம்பியனான் அர்ஜென்டினா ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டியை நேரில் காண ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
விண்ணைத் தொட்ட டிக்கெட் விலை
அதற்கு ஏற்றால் போல டிக்கெட் விலையும் விண்ணைத் தொட்டு இருக்கிறது.
ஆரம்ப கட்டணம் ரு. 7 லட்சம்
மைதானத்திற்குள் நுழைவதற்கான குறைந்தபட்ச ‘கெட்-இன்’ டிக்கெட் விலையே இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சம் ரூபாயாக உள்ளது.
லோயர் லெவல் ரூ.11 லட்சம்
மைதானத்தின் தரைத்தளத்திற்கு அருகில் அமர்ந்து போட்டியை இன்னும் நெருக்கமாக ரசிப்பதற்கான லோயர் லெவல் டிக்கெட்டுகளின் ஆரம்ப விலை மட்டுமே 11 லட்சம் ரூபாய் ஆகும்.
பிரீமியம் பிராண்த் ரூ.32 லட்சம்
நேரடியாக விற்பனை செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ பிரீமியம் 'பிரண்ட் கேட்டகிரி 1' டிக்கெட்டுகளின் விலை 32 லட்சம் ரூபாய் வரை எகிறியுள்ளது.
கோடிகளை தொட்ட டிக்கெட் விலை
இதற்கெல்லாம் மேலாக, சர்வதேச கால்பந்து சம்மேளனம் கொண்டு வந்துள்ள அதிகாரப்பூர்வ மறுவிற்பனைச் சந்தையில், ரசிகர்களின் அதீத போட்டி காரணமாக சில வி.ஐ.பி டிக்கெட்டுகளின் விலை பல கோடிகளைத் தொட்டு மிரளவைக்கிறது.
அமெரிக்க மண்ணில் சாதனை
இதன்மூலம், அமெரிக்க மண்ணில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில், அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படும் போட்டி என்ற சாதனையும் படைக்கப்பட்டுள்ளது.
========