ஹாங்காங் சிக்ஸஸ் தொடர்
ஹாங் ஹாங் சிக்ஸர் 2026 தொடர், வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.
ஹாங்காங் சிக்ஸஸ் தொடர் என்பது 11 வீரர்களுக்கு பதிலாக 6 வீரர்கள் கொண்ட அணிகள், 6 ஓவர்கள் கொண்ட போட்டியில் விளையாடும் போட்டியாகும்.
1993-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்தொடரில் இந்திய அணி 2005-ம் ஆண்டு கோப்பை வென்றது. நடுவில் சில காரணங்களால் நடத்தப்படாமல் இருந்த இத்தொடர் மீண்டும் 2024 முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான்
இந்தநிலையில் 2026 ஹாங்காங் சிக்சஸ் தொடரானது கடந்த அக்டோபர் 30ஆம் தேதி தொடங்கியது. பரபரப்பாக நடைபெற்ற தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.
ஆஸ்திரேலியா 115 ரன்கள்
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 6 ஓவரில் 115 ரன்கள் அடித்தது.
ஓபனர், மேக்ஸ் பிரைனட் அபாரமாக விளையாடி, 14 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 44 ரன்களை குவித்த நிலையில், நிக் ஹாப்சன் 8 பந்தில் 23 ரன்களையும், ராஸ் 10 பந்தில் 29 ரன்களையும் குவித்து அசத்தினார்கள்.
மூன்று பேட்டர்களும் அதிரடி காட்டியதால், ஆஸ்திரேலிய அணி, 6 ஓவர்களில் 115/4 ரன்களை குவித்து அசத்தியது.
ஆப்கானிஸ்தான் அசத்தல் ஆட்டம்
தொடர்ந்து விளையாடிய குல்பதின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி 5.1 ஓவரிலேயே இலக்கை எட்டி கோப்பையை தட்டிச்சென்றது. இந்தத்தொடரில் ஆப்கானிஸ்தான் வெல்லும் முதல் கோப்பை இதுவாகும்.
116 ரன்கள் இலக்கை துரத்திக் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில், ஓபனர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கரிம் ஜனட் 5 பந்தில் 13 ரன்களை மட்டும் அடித்த நிலையில், கேப்டன் குல்பதீன் நைப் 6 பந்தில் 17 ரன்னை மட்டும் எடுத்து அவுட் ஆனார்.
அதன்பிறகு, ஆப்கானிஸ்தான் அணி விக்கெட்டை இழக்கவில்லை.
இறுதிக் கட்டத்தில், பார்முனுல்லா சைப் 7 பந்தில் 4 சிக்ஸர்கள் உட்பட 26 ரன்களை அடித்த நிலையில், இம்ரான் மேர் 14 பந்தில் 2 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உட்பட 53 ரன்களை குவித்து அசத்தினார்.
4 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி
இதனால், ஆப்கானிஸ்தான் அணி, 5.1 ஓவர்களில் 119/2 ரன்களை எடுத்து, 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்று அசத்தியது.
பரிசுத்தொகை குறைவுதான்
ஹாங் ஹாங் சிக்ஸஸ் தொடரின், மொத்த பரிசு தொகை மதிப்பே 1.90 கோடிதான். இதில், கோப்பை வெல்லும் அணிக்கு சுமார் 33.22 லட்சம் பரிசாக வழங்கப்படும். இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு, சுமார் 18.98 லட்சம் பரிசாக வழங்கப்படும்.
மதிப்பு மிக்க தொடர், ஆப்கான் சாதனை
பெரிய பரிசு தொகை இல்லை என்றாலும், இத்தொடர் மதிப்பு மிக்க தொடராக மாறியிருப்பதால், பல அணிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு விளையாடி வருகின்றன.
==========