AI Chip in the Suryavanshi Missile? It Must Be Sent for Lab Testing! – Controversy Erupts Over Remarks by Pakistani Expert!
Vaibhav Suryavanshi AI Chip Controversy
இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷியின் அசுரத்தனமான பேட்டிங் குறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் நிபுணர் நௌமேன் நியாஸ் தெரிவித்துள்ள கருத்து தற்போது கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?
வெறும் 12 வயதிலேயே பீகார் மாநில அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டியில் களம் இறங்கி சாதனை படைத்தவர் வைபவ்.
தற்போது 13 வயதாகும் சூர்யவன்ஷியை, ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது.
உலகையே திரும்பிப்பார்க்க வைத்த சூர்யவன்ஷி
தனது அறிமுக ஐபிஎல் போட்டியின் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசிய சூர்யவன்ஷி, சமீபத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக வெறும் 36 பந்துகளில் சதமடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார்.
பாகிஸ்தான் நிபுணரின் வினோத புகார்
வைபவ் சூர்யவன்ஷியின் இந்த அசாதாரண ஆட்டத்தை ஜீரணிக்க முடியாமல், பாகிஸ்தான் கிரிக்கெட் நிபுணர் நௌமேன் நியாஸ் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்துள்ளார்.
சக்தியை விட நுட்பமே அதிகம்
சூர்யவன்ஷி குறித்து ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், "18 வயதில் கூட ஒருவரால் இத்தகைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. சூர்யவன்ஷியின் ஆட்டத்தில் சக்தியை விட நுட்பமே அதிகம் உள்ளது.
சூர்யவன்ஷி பேட்டை சோதனை செய்ய வேண்டும்
எனவே, வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்துவது போல, சூர்யவன்ஷி பயன்படுத்தும் பேட்டை ஆய்வகத்திற்கு அதாவது Lab Test - க்கு அனுப்ப வேண்டும்" என்று கூறியுள்ளார்.
AI சிப் பயன்படுத்தி இருக்கலாம் என சந்தேகம்
அவர் மேலும் கூறுகையில், சூர்யவன்ஷி தனது பேட்டில் செயற்கை நுண்ணறிவு அதாவது AI சிப் எதையேனும் பயன்படுத்தியிருக்கலாம் என்றும், அதன் மூலமே அவர் பந்துகளை இவ்வளவு சக்திவாய்ந்ததாகச் சிதறடிக்கிறார் என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
சூர்யவன்ஷி ரசிகர்களின் பதிலடி
தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும், பேட்டில் சிப் வைத்து விளையாடி சதமடிக்க முடியும் என்பது அறிவியலுக்குப் புறம்பானது என்று கிரிக்கெட் ரசிகர்கள் இந்த கருத்தை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.
ஆதாரமற்ற புகார்களை கூறுவது முறையல்ல
திறமையான இளம் வீரர்களை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக, இத்தகைய ஆதாரமற்ற புகார்களைக் கூறுவது முறையல்ல என்றும் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றனர்.
=====