Super 4 round match Indian team defeated Pakistan by impressive performance of Abhishek Sharma  https://x.com/BCCI
விளையாட்டு

Asia Cup T20 : அபிஷேக் சர்மா அதிரடி : பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா

பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்திய அணி அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால், பாகிஸ்தான் வீழ்த்தியது.

Kannan

ஆசிய கோப்பை கிரிக்கெட் :

Asia Cup Super 4 - India beat Pakistan twice in seven days : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், லீக் சுற்று முடிந்து, சூப்பர் நான்கு சுற்றுகள் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இந்தியா - பாகிஸ்தான் மோதல் :

2வது சூப்பர் நான்கு சுற்று போட்டியில், இந்தியா - பாகிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தான் 171 ரன்கள் :

அதிகபட்சமாக சகிப்சதா பர்கான் 58 ரன்களும், சைம் அயுப், முகமது நவாஸ் தலா 21 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் சிவம் துபே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஓரளவு சவாலான இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது.

இந்தியா அதிரடி ஆட்டம் :

தொடக்க ஆட்டக்காரர்களான் சுப்மன் கில் – அபிசேக் சர்மா அதிரடியான ஆட்டத்தை கொடுத்தனர். 39 பந்துகளை எதிர்கொண்ட அபிசேக் சர்மா 5 சிக்சர் மற்றும் 6 பவுண்டரியுடன் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

சுப்மன் கில் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்துவந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருந்தபோது ரன் குவிப்பு குறைந்தது.

6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி :

நிதானமாக விளையாடிய சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் வெற்றியை உறுதி செய்தனர். 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திலக் வர்மா 30 ரன்களுடனும், ஹர்திக் பாண்ட்யா 7 ரன்களுடன் கடைசி வரை களத்தில் நின்றார்கள். 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

=================