Asian Games, Indian shooting duo Kamaljeet and Suruchi Singh achieved winning gold medal source:thamizhalai,ai generated
விளையாட்டு

”துப்பாக்கி சுடுதலில் தங்கம்” : 10 மீட்டர் ஏர் பிஸ்டல், சாதித்த கமல்ஜீத், சுருச்சி சிங் ஜோடி : குவியும் வாழ்த்து!

ஆசிய விளையாட்டு போட்டியில், துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் கமல்ஜீத், சுருச்சி சிங் ஜோடி தங்கம் வென்று சாதித்து இருக்கிறது.

Kannan

ஆசிய விளையாட்டு போட்டிகள்

20வது ஆசிய விளை​யாட்டு போட்டி ஜப்​பானின் ஐச்​சி-நகோயா மாகாணத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் பதக்கங்களை வென்று அசத்தி வருகிறார்கள்.

துப்பாக்கி சுடுதலில் தங்கம்

துப்​பாக்கி சுடு​தலில் 10 மீட்​டர் ஏர் பிஸ்​டல் கலப்பு அணி​கள் பிரிவு இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் சுருச்சி சிங், கமல்​ஜீத் ஜோடி 484.6 புள்​ளி​களை குவித்து முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​கம் வென்​றது.

நடப்பு ஆசிய விளை​யாட்டு தொடரில் துப்​பாக்கி சுடு​தலில் இந்​தியா கைப்​பற்​றும் முதல் தங்​கப் பதக்​கம் இது​வாகும்.

தென்கொரியா வெள்ளி, ஈரான் வெண்கலம்

தென் கொரி​யா​வின் கேயூன் சூ, சுஹியோன் ஹாங் ஜோடி 478 புள்​ளி​களு​டன் 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​க​மும், ஈரானின் ரோஸ்​டா​மி யன் ஹனியே, கோல்​கந்​தன் வஹித் ஜோடி 415.8 புள்​ளி​களு​டன் 3-வது இடம் பிடித்து வெண்​கலப் பதக்​க​மும் பெற்​றன.

வெள்ளி பதக்​கம்

ஆடவருக்​கான 50 மீட்​டர் ரைபிள் 3 பொஷிசன் பிரி​வில் ஐஸ்​வரி பிர​தாப் சிங் தோமர், ருத்​ராங்க் ஷ் பாட்​டீல், நீரஜ் குமார் ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி 1,762 புள்​ளி​களை குவித்து 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றது.

சீனா 1,766 புள்​ளி​களு​டன் முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​க​மும், கொரியா 1,751 புள்​ளி​களு​டன் 3-வது இடம் பிடித்து வெண்​கலப் பதக்க​மும் வென்​றன.

===================