Australia Squad Announcement for ODI Series Against India 2025 https://x.com/CricketAus
விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் : அணியை அறிவித்தது ஆஸ்திரேலியா

Australia Squad Announcement for ODI Series Against India 2025 : இந்தியாவுக்கு எதிரான விளையாட இருக்கும் ஒருநாள் தொடருக்கான அணியை அறிவித்தது ஆஸ்திரேலியா.

Kannan

ஒருநாள், டி20 தொடர்கள் :

Australia Squad Announcement for ODI Series Against India 2025 : இந்​திய கிரிக்கெட் அணி விரைவில் ஆஸ்​திரேலியாவுக்கு சென்​று, அந்த அணிக்கு எதி​ராக 3 போட்​டிகள் கொண்ட ஒரு​நாள் தொடர், 5 போட்​டிகள் கொண்ட சர்​வ​தேச டி20 தொடரில் விளை​யாட இருக்கிறது. இந்​தத் தொடர் வரும் 19ம் தேதி(IND vs AUS Match Date) தொடங்​கு​கிறது. இந்​தத் தொடருக்​கான இந்​திய அணியை இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யம் ​(பிசிசிஐ) ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்தச் சூழலில் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் தொடருக்கான அணியை அறிவித்துள்ளது.

ஒருநாள் தொடர் - கேப்டன் மார்ஷ்

கடந்த ஆகஸ்ட் மாதம் தென்னாப்பிரிக்கா உடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது நடப்பு உலக சாம்பியனான ஆஸ்திரேலியா. எனவே, அதில் இருந்து மீண்டு வர இந்தியாவுக்கான தொடரில் வெற்றி பெற அந்த அணி முனைப்பு காட்டும். காயம் காரணமாக ஓய்வில் உள்ள கம்மின்ஸுக்கு பதிலாக ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியை மார்ஷ் வழி நடத்த இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் அனுபவ வீரர் மிட்செல் ஸ்டார்க் விளையாடுகிறார்.

ஒருநாள் தொடருக்கான அணி

ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனொலி, பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லீஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஓவன், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷாட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதேபோன்று, முதல் 2 டி20 போட்டிகளுக்கான அணியையும் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: ஷுப்​மன் கில் (கேப்​டன்), ரோஹித் சர்​மா, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், அக்​சர் படேல், கே.எல்.ராகுல் (விக்​கெட் கீப்​பர்), துருவ் ஜூரல், யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், நித்திஷ் ரெட்​டி, வாஷிங்​டன் சுந்​தர், குல்​தீப் யாதவ், ஹர்​ஷித் ராணா, முகமது சிராஜ், அர்​ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா.

மேலும் படிக்க : ஆஸி. தொடருக்கான இந்திய அணி: கேப்டனாக சுப்மன் கில் நியமனம்

இந்தத் தொடரில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இளம் வீரரான ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மா இந்த தொடரில் பேட்ஸ்மேனாக விளையாடுகிறார்.

=============