BCCI Announces ₹131 Crore Prize for T20 Champion Team India for winning ICC T20 World Cup 2026  source: bcci,x.com
விளையாட்டு

T20 உலகக் கோப்பை வெற்றி : இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு: பிசிசிஐ அறிவிப்பு!

BCCI Announces ₹131 Crore Prize for T20 Champion Team India : உலகக் கோப்பை வென்ற இந்திய அணி கேப்டன்கள் ராஹித் சர்மா, எம்.எஸ்.தோனி, கபில் தேவ் பட்டியலில் தற்போது சூர்யகுமார் யாதவும் இணைந்துள்ளார்.

S Kavitha

₹131 Crore Prize for T20 Champion Team India: BCCI Announces:

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 131 கோடி ரூபாயை பிசிசிஐ பரிசாக அறிவித்து உள்ளது.

உலகக் கோப்பை வென்ற இந்திய அணி

2026 டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி, 3வது முறையாக கோப்பையை தட்டிச் சென்றது.

சஞ்சு சாம்சனின் அதிரடி 89 ரன்கள் மற்றும் அபிஷேக் சர்மாவின் மின்னல் வேக 52 ரன்கள் இந்தியாவை வெற்றிப் பாதையில் அழைத்து சென்றன.

வாழ்த்துகளும், மகிழ்ச்சியும்

டி 20 உலகக்கோப்பையை மூன்றாவது முறையாக வென்ற அணி என்ற சாதனையை இந்திய அணி பெற்றுள்ளது.

இந்திய அணியின் இந்த மகத்தான வெற்றிக்கு பிரதமர் மோடி, அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர், வீராங்கணைகள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்திய அணியின் தொடர் வெற்றியை ரசிகர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பிசிசிஐ பரிசுத்தொகை

உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கான பரிசுத் தொகையை பிசிசிஐ எப்போதும் அறிவிக்கும்.

அதன்படி, டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வுக் குழுவினருக்கு பிசிசிஐ வாழ்த்து தெரிவித்து, பரிசு தொகையையும் அறிவித்துள்ளது.

ரூ.131 கோடி பரிசுத்தொகை

அதன்படி பிசிசிஐ சார்பில் மொத்தமாக 131 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. 2024ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்றபோது பிசிசிஐ ரூ. 125 கோடி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி வெற்றியின் சிறப்பு

மேலும் 2007 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து இந்த போட்டியை நடத்தும் நாடே கோப்பையை வென்றது இதுவே முதல் முறையாகவும் உள்ளது.

பிரத்யேக பட்டியலில் சூர்யகுமார் யாதவ்

இதுவரை உலகக் கோப்பை வென்ற இந்திய அணி கேப்டன்கள் ராஹித் சர்மா, எம்.எஸ்.தோனி, கபில் தேவ் பட்டியலில் தற்போது சூர்யகுமார் யாதவும் இணைந்துள்ளார்.