இந்திய கிரிக்கெட் வாரியம் :
BCCI Annual Income 2024 Update : உலக அளவில் கிரிக்கெட் வாரியங்களில் வருமானத்தை அதிகமாக ஈட்டுவதில் இந்திய கிரிக்கெட் வாரியம் முதலிடத்தில் உள்ளது. 2023-24 நிதியாண்டில் பிசிசிஐ வருமானத்தில் புதிய சாதனை படைத்து உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ரசிகர்கள் விரும்பிப் பார்க்கும் ஐபிஎல்(IPL Series) தொடர்தான்.
ஐபிஎல் மூலம் அதிக வருவாய் :
பிசிசிஐயின் மொத்த வருமானத்தில் பாதிக்கும் மேல், அதாவது 59%, ஐபிஎல் தொடர்(BCCI Income From IPL 2024) மூலமாக மட்டுமே கிடைத்துள்ளது. இதன் மதிப்பு மட்டும் சுமார் ₹5,761 கோடி. இதனால்தான் ஐபிஎல் தொடரை பிசிசிஐ-யின் ’தங்க முட்டையிடும் வாத்து’ என்று அனைவரும் அழைக்கிறார்கள். இது இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவுகிறது.
பணம் கொழிக்கும் பிசிசிஐ :
ஐபிஎல் தவிர, பிசிசிஐக்கு வேறு பல வழிகளிலும் பணம் வருகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மூலம் கிடைக்கும் பங்கு. இதன் மூலம் மட்டுமே ரூ.1,042 கோடி வந்துள்ளது. வங்கிகளில் பிசிசிஐ வைத்துள்ள பணத்திற்கு வட்டியாக மட்டும் ₹987 கோடி கிடைத்துள்ளது.
பிசிசிஐ வங்கி வைப்புத்தொகை :
பிசிசிஐயின் வங்கி வைப்புத்தொகை(BCCI Bank Balance) மட்டுமே 10,000 கோடியை தாண்டும் எனவும் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே ஓர் ஆண்டுக்கு 987 கோடி ரூபாயை வட்டியாக மட்டுமே பெற்று இருக்கிறது.
மேலும் படிக்க : ஐசிசி பேட்ஸ்மேன்கள் தரவரிசை : ஜோ ரூட் மீண்டும் முதலிடம்
பல்வேறு வழிகளில் கோடிகளில் வருவாய் :
ஒளிபரப்பு உரிமைகள் (ஐபிஎல் தவிர): இந்திய அணி விளையாடும் மற்ற சர்வதேசப் போட்டிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமம் மூலம் ரூ. 813 கோடி கிடைத்துள்ளது. மகளிர் பிரீமியர் லீக் (WPL): பெண்களுக்கான ஐபிஎல் தொடரான WPL மூலமாக ரூ. 378 கோடி வருமானமாக வந்துள்ளது. இது மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஒரு நல்ல அறிகுறியாக தெரிகிறது.
டிக்கெட் விற்பனை மூலம் வருமானம் :
இந்தியாவில் நடக்கும் போட்டிகள்: இந்தியாவில் நடக்கும் சர்வதேசப் போட்டிகளின் டிக்கெட்(IPL Ticket Income) விற்பனை மற்றும் பிற உரிமைகள் மூலம் ரூ.361 கோடி ஈட்டியுள்ளது. இவை அனைத்தும் சேர்த்து, பிசிசிஐயை உலகின் மிகவும் பணக்கார கிரிக்கெட் வாரியம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. கிரிக்கெட் மீதான இந்திய ரசிகர்களின் அதீத ஆதரவும், சரியான திட்டமிடலுமே இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணம்.
=====