Cricketer Sonam Yeshi creates history 8 wicket haul in T20I cricket Bhutan Defeated Myanmar by 82 runs Match Highlights in Tamil google
விளையாட்டு

ஒரே போட்டி 8 விக்கெட்டுகள் : உலக சாதனை படைத்த பூடான் வீரர்!

Cricketer Sonam Yeshi Stats in Tamil : பூடானை சேர்ந்த 22 வயது சோனம் யேஷே, சர்வதேச ஆடவர் டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பவுலராக உலகசாதனை படைத்துள்ளார்.

Baala Murugan

பூட்டான் வீரர் சாதனை

Cricketer Sonam Yeshi Stats in Tamil : மியான்மர் பூட்டானுக்கு நடைபெற்ற போட்டியில், மியான்மர் அணியை 4 ஓவர்களில் 7 ரன்களுக்குள் சுருட்டி 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார் பூட்டான் இளம்வீரர் சோனம் யேஷே(Sonam Yeshy).

9 பந்துகளில் அரைசதம் அடித்து முன்னிலை

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் சில அபூர்வ சாதனைகளை எல்லாம் கிரிக்கெட்டிக்குள் சமீபத்தில் காலடி பதித்த இளம் வீரர்களே வைத்துள்ளனர்.

உதாரணத்திற்கு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த வீரராக நேபாளத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரே உள்ளார்.

2007ஆம் ஆண்டு யுவராஜ் சிங் படைத்திருந்த 12 பந்தில் அரைசதம் என்ற உலகசாதனையை, கடந்த 2023ஆம் ஆண்டு நேபாள் வீரர் திபேந்திர சிங் 9 பந்தில் அரைசதமடித்து முறியடித்தார்.

உலக சாதனை படைத்த பூ்டான் வீரர்

அதேபோல ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளராக இந்தோனேசியா பவுலர் கெடே பிரியந்தனா சமீபத்தில் உலகசாதனை படைத்தார்.

அந்தவகையில் தான் சர்வதேச ஆடவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் 8 விக்கெட் வீழ்த்திய முதல் பவுலராக உலக சாதனை படைத்துள்ளார் பூட்டானை சேர்ந்த சோனம் யேஷே என்ற 22 வயது வீரர்.

5-0 என்ற கணக்கில் வெற்றி

பூட்டானுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்த மியான்மர் அணி 5 டி20 போட்டிகள்(Bhutan vs Myanmar T20 Match Highlights) கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 5 போட்டிகளையும் வென்று டாமினேட் செய்த பூட்டான் அணி 5-0 என தொடரை கைப்பற்றி அசத்தியது.

இன்று நடந்த கடைசி டி20 போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் மியான்மரை வீழ்த்தியது பூட்டான் அணி.

3 போட்டியில் உலக சாதனை படைத்த சோனம்யேஷே

கடந்த டிசம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற 3வது டி20 போட்டியில் மியான்மரை 45 ரன்னுக்கு சுருட்டிய பூட்டான் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

அந்தப் போட்டியில் 4 ஓவர்களை வீசிய பூட்டானை சேர்ந்த 22 வயது இடதுகை ஸ்பின்னரான சோனம் யேஷே 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

வாழத்து கூறும் ரசிகர்கள்

இதுவரை ஆண்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தநிலையில், 8 விக்கெட்டுகளை வீழ்த்திய சோனம் யேஷே உலகசாதனை படைத்து, வரலாறில் ஒரே போட்டியில் அதிக விக்கெட் எடுப்பதில் முதலிடம் பிடித்துள்ளார்.

இவரின் இந்த சாதனைக்கு பூ்டான் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரியர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.