ஐபிஎல் 2027 தொடருக்கான ஏற்பாடுகள் தற்போதே தொடங்கியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முக்கியமான வீரர்கள் பரிமாற்றத்தை மேற்கொண்டுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம் மொத்தம் 4 வீரர்கள் இரு அணிகளுக்கும் இடையே மாற்றப்பட்டுள்ளனர்.
இதன்படி, இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஜாக் எட்வர்ட்ஸ் ஆகியோர் சிஎஸ்கே அணிக்கு வந்துள்ளனர்.
இந்த டிரேடில் முக்கியமாகக் கவனம் பெற்றிருப்பவர் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன்.
அதிரடியான பேட்டிங் மற்றும் ஸ்பின் பந்துவீச்சு என இரண்டிலும் பங்களிக்கக்கூடிய இவர், சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார்.
லிவிங்ஸ்டன் முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ரூ.13 கோடிக்கு வாங்கப்பட்டிருந்தார். தற்போது ரூ.6 கோடி திருத்தப்பட்ட தொகையில் சிஎஸ்கே அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மறுபுறம், சிஎஸ்கே அணியில் இருந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது ரூ.4.8 கோடி தொகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்குச் சென்றுள்ளார்.
கடந்த 2018 முதல் 2021 வரை ஹைதராபாத் அணிக்காக விளையாடிய கலீல், மீண்டும் அந்த அணிக்குத் திரும்புகிறார்.
ஐபிஎல் 2025 தொடரில் சிஎஸ்கே அணிக்காக 14 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். 2026 தொடரில் காயம் காரணமாக அவரால் தொடர்ந்து விளையாட முடியவில்லை.
இந்த நான்கு வீரர்கள் பரிமாற்றத்தின் மூலம் சிஎஸ்கே அணி தனது ஆல்ரவுண்டர் வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் ஹைதராபாத் அணி தனது வேகப்பந்து வீச்சுப் பிரிவை வலுப்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2027 தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு மற்றும் விடுவிப்பு நடவடிக்கைகள் நடைபெற உள்ள நிலையில், இந்த டிரேட் இரு அணிகளின் ரசிகர்களிடமும் கவனத்தைப் பெற்றுள்ளது.
====================