https://x.com/ICC?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Eauthor
விளையாட்டு

தோனிக்கு ஐசிசி கௌவரம் ; Hall Of Fame பட்டியலில் இடம்

ஐசிசியின் கௌரவப் பட்டியலில் இணைந்தார் ’தல ‘ தோனி

Kannan

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம் எஸ் தோனியின் பெயர் ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் (ICC Hall of Fame) இடம் பெற்று இருக்கிறது. ஹாசிம் அம்லா, ஸ்மித் ஆகியோரின் பெயர்களும் இடம்பிடித்து இருக்கின்றன.

இந்திய அணியின் முக்கிய கேப்டன்களில் ஒருவராக இருந்த தோனி சர்வதேச போட்டிகளில் 17, 266 ரன்கள் அடித்துள்ளார்.

விக்கெட் கீப்பிங் மூலம் 829 முறை அவுட் ஆக்கியுள்ளார். 538 சர்வதேச போட்டியில் விளையாடியுள்ள தோனி தனது திறமையை நிரூபித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக தோனி இருந்த போதுதான் ஒரு நாள் உலகக்கோப்பை, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என அனைத்தையும் இந்தியா வென்று சாதித்தது.

தோனியின் தலைமையில்தான் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி முதலிடத்தை பிடித்தது.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து விளையாடி வருகிறார் தோனி.

இந்தநிலையில்,’தல’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் தோனியை கௌரவப்படுத்தி இருக்கிறது ஐசிசி.

அதன்படி, ஹால் ஆஃப் ஃபேமில் (ICC Hall of Fame) பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேத்யூ ஹைடன், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஆசிம் அம்லா, ஸ்மித், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி ஆகியோரது பெயர்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களான நீது டேவிட், வீரேந்தர் சேவாக், டயான் எடுல்ஜி, வினோத் மங்கட், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, கபில் தேவ், பிஷன் சிங் பேடி மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோரும் ஹால் ஆஃப் ஃபேமில் (ICC Hall of Fame)கௌரவத்தை பெற்று இருப்பதை குறிப்பிடத்தக்கது.