ராயல் சேலஞ்சர்ஸ் தோற்றம்
Diageo Will Sale RCB Team : ஆம் ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டபோது, பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட அணியை வாங்கிய, மதுபான ஆலை தொழிலதிபர் விஜய் மல்லையா, அதற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என பெயரிட்டார்.பின்னர், வங்கியில் கடன் பெற்று திருப்பி செலுத்தாத நிலையில் விஜய் மல்லையா லண்டன் தப்பிச் சென்றதால். ஆர்சிபி நிர்வாகம் கேள்விக்குறியானது. இதைத்தொடர்ந்து விஜய் மல்லையாவின் மதுபான நிறுவனத்தை, இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட டியாஜியோ கையகப்படுத்தியது.
டியாஜியோ நிறுவனம் கடிதம்
ஆனால், ஆர்சிபி அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு வெற்றியை பதிவு செய்தது. ஆனால், தற்போது ஆர்சிபி ஆண்கள் மற்றும் பெண்கள் அணியை விற்பனை செய்யவிருப்பதாக, டியாஜியோ நிறுவனம் மும்பை பங்கு சந்தைக்கு கடிதம் எழுதியுள்ளது.
மார்ச் 31 க்குள் விற்பனை முடிக்கப்படும்
மேலும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்த விற்பனை முடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ரன் மெஷின் விராட் கோலி உள்ளிட்டோர் அடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றியை பதிவு செய்தும் அணியை விற்பனையாகும் முடிவு வெளிவந்துள்ளது, ஆர்சிபி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.
ஐபிஎல் அணிகளின் மதிப்பு
ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றதன் மூலம் ஆர்சிபி அணியின் நிகர மதிப்பு ரூ.2327 கோடியாக(RCB Net Worth in Rupees 2025) உயர்ந்துள்ளது. ஐபிஎல் தொடரில் நிகர மதிப்பு அடிப்படையில் ஆர்சிபி அணி தான் முதலிடத்தில் உள்ளது. 2 ஆவது இடத்தில் ரூ.2094 கோடிகள் உடன் மும்பை அணியும், 3 ஆவது இடத்தில் சிஎஸ்கே அணி ரூ.2033 கோடி உடன் உள்ளது. அதே சமயம் பெண்கள் ஆர்சிபி அணியின் நிகர மதிப்பு ரூ.901 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
ஆர்சிபி அணியின் உரியமையாளர் யார்
கிரிக்பஸ் அறிக்கையின்படி, சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அதர் பூனவல்லா, JSW குழுமத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பார்த் ஜிண்டால், டெல்லியைச் சேர்ந்த பல துறைகளில் ஆர்வமுள்ள தொழிலதிபர் அதானி குழுமம் மற்றும் இரண்டு அமெரிக்க தனியார் பங்கு நிறுவனங்கள் ஆர்சிபி அணியை விலைக்கு வாங்க ஆர்வமுள்ளதாக தெரிவித்துள்ளது.ஆனால், தற்பொழுது ஆர்சிபி அணி விற்பனைக்கு வந்துள்ள நிலையில், யார் வாங்குவார், இனி வரும் ஐபிஎல் தொடர்களில் அதன் வெற்றிப்பாதை எப்படி இருக்கும் என்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் கலந்த கேள்விக்குறியாகவே அமைந்துள்ளது.