Djokovic will face Alcaraz at the Australian Open for his 25th Grand Slam victory Google
விளையாட்டு

Australian Open: 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டம்: சாதிப்பாரா ஜோகோவிச்

Melbourne King Novak Djokovic : 38 வயதில், 25வது கிராண்ட்ஸ்லாம் வெற்றிக்காக, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில், அல்காரசை எதிர்கொள்கிறார் ஜோகோவிச்.

Kannan

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்

Novak Djokovic keeps 25th Grand Slam dream, in Australian open Tennis final : ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டிகளிள் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கின்றன.

அலெக்சாண்டர் vs அல்கராஸ்

ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. 5 மணி நேரம் 27 நிமிடங்கள் வரை நீண்ட இந்த ஆட்டத்தில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ்வை ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசை எதிர்கொண்டார்.

இறுதிப் போட்டியில் அல்கராஸ்

5 மணி நேரம் 27 நிமிடங்கள் வரை நீண்ட முதல் போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ்வை ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார்.

நோவக் ஜோகோவிச் vs ஜானிக் சின்னர்

இரண்டாவது அரையிறுதியில் செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச், நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜானிக் சின்னரை எதிர்கொண்டார்.

கடந்த ஐந்து போட்டிகளில் சின்னரிடம் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்திருந்த ஜோக்கோவிச், இந்த முக்கியமான அரையிறுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி பழிதீர்த்தார்

முதல் மற்றும் 3ஆவது செட்களை சின்னரும், 2 மற்றும் 4ஆவது செட்களை ஜோகோவிச்சும் மாறி மாறி கைப்பற்றினர்.

ஜோகோவிச் அசத்தல் ஆட்டம்

அதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டில், சின்னர் பெற்ற 8 பிரேக் பாயிண்ட் வாய்ப்புகளை முறியடித்து ஜோக்கோவிச் தனது அனுபவத்தை வெளிப்படுத்தி தன்வசப்படுத்தினார்.

3-6, 6-3, 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றிவாகை சூடினார். இந்த போட்டி 4 மணி 9 நிமிடங்கள் நடந்தது.

King of Melbourne

காயங்கள் மற்றும் வயது தடையாக இருந்தாலும், "King of Melbourne" என்ற பெயரை மீண்டும் நிரூபித்தார் ஜோகோவிச்.

சாதித்த ஜோகோவிச்

இந்த வெற்றி மூலம், 38 வயதான ஜோக்கோவிச், ஆஸ்திரேலிய ஓபன் வரலாற்றில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மிகவும் வயதான வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். போட்டி நடைபெற்ற Rod Laver Arena-வில் அதிகமான வெற்றிகள் பெற்ற முதல் வீரரும் அவர்தான்.

அல்காரஸ் vs ஜோகோவிச்

இறுதிப்போட்டியில் அல்காரஸ் உடன் ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்தவுள்ளார். முன்னதாக இருவரும் 9 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

இதில் ஜோகோவிச் ஐந்து போட்டிகளில் வென்றிருந்தாலும், கடைசியாக நடந்த US Open அரையிறுதியில் அல்காரஸ் வெற்றி பெற்றிருந்தார்.

சாதிப்பாரா ஜோகோவிச்

ஆனாலும் ஆஸ்திரேலிய ஓபன் வரலாற்றில் இறுதிப் போட்டியில் 10 முறை களம்கண்டுள்ள ஜோகோவிச், ஒரு முறையும் தோல்வியடைந்ததில்லை என்ற வரலாற்றை கொண்டவர்.

இந்த முறையும் அவர் அந்த சாதனை தொடரும் என்று டென்னிஸ் உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது.

25வது கிராண்ட்ஸ்லாம்

அவ்வாறு ஜோகோவிச் வெற்றியை ருசித்தால், டென்னிஸ் வரலாற்றில் மார்கரெட் கோர்ட்டின் சாதனையை முறியடித்து, 25ஆவது கிராண்ட்ஸ்லாம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.

சவாலான ஆட்டம்

அல்காரஸை வீழ்த்துவதன் மூலம், ஏடிபி (ATP) தரவரிசையில் மீண்டும் ஜோகோவிச் முதலிடத்தைப் பிடிக்கவும் வாய்ப்புள்ளது. 2024 ஆஸி ஓபனில் சின்னரிடம் தோற்று வெளியேறிய ஜோக்கோவிச், இந்த ஆண்டு அவரை வீழ்த்தியதன் மூலம் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்.

மறுபுறம் அல்காரஸ் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ஜோக்கோவிச்சிற்கு கடும் சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

======