8 teams advancing to the quarter-finals of the Football World Cup, anticipation regarding who will win the trophy  AI generated
விளையாட்டு

காலிறுதிக்கு முன்னேறிய 8 அணிகள் : பிரான்ஸ், மொராக்கோ, ஸ்பெயின், பெல்ஜியம், நார்வே, இங்கிலாந்து, அர்ஜென்டினா, சுவிஸ்!

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறிய நிலையில், கோப்பை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Kannan

பிஃபா - 48 அணிகள் மோதல்

பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர், அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடைபெற்று வருகிறது. இதில் 48 அணிகள் பங்கேற்று முதல் சுற்றான குரூப் சுற்று ஆட்டத்தில் விளையாடின.

‘ரவுண்ட் ஆப் 32’ சுற்று

ஒவ்வொரு பிரிவுக்கும் 4 அணிகள் என மொத்தம் 12 பிரிவுகளாக இந்த சுற்று நடைபெற்றது. இதில் பிரிவு வாரியாக முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் மற்றும் 3-வது இடத்தை பிடித்த சிறந்த 8 அணிகளும் நாக்-அவுட் சுற்றான ‘ரவுண்ட் ஆப் 32’-க்கு முன்னேறின.

பரபரப்பாக நடைபெற்ற இந்த சுற்றில் நெதர்லாந்து, ஜெர்மனி, குரோஷியா உட்பட 16 அணிகள் வெளியேறின.

ரவுண்ட் ஆப் 16

தொடர்ந்து ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது.இதில் கனடா, பராகுவே, அமெரிக்கா, பிரேசில், போர்ச்சுகல், மெக்சிகோ, கொலம்பியா, எகிப்து உள்ளிட்ட அணிகள் வெளியேறின.

இந்த தொடரை நடத்தும் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா என எந்தவொரு அணியும் காலிறுதிக்கு முன்னேறவில்லை.

பிரான்ஸ், மொராக்கோ, ஸ்பெயின், பெல்ஜியம், நார்வே, இங்கிலாந்து, அர்ஜெண்டினா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறி இருக்கின்றன.

இதில் எந்த அணி கோப்பையை வெல்லப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

காலிறுதி ஆட்டங்களின் விவரம் :

1. பிரான்ஸ் vs மொராக்கோ - ஜூலை 10

2. ஸ்பெயின் vs பெல்ஜியம் - ஜூலை 11

3. நார்வே vs இங்கிலாந்து - ஜூலை 12

4. அர்ஜெண்டினா vs சுவிட்சர்லாந்து - ஜூலை 12

இதில் வெற்றி பெறும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு செல்லும். அங்கு நடைபெறும் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெறும் அணிகள், இறுதிப் போட்டியில் மோதி, ஒரு அணி கோப்பையை வெல்லும்.

===========================