122 M, a player who deftly caught a ball thrown down by a drone, setting a Guinness World Record. source:google
விளையாட்டு

122 மீ. உயர CATCH : உலக கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற ஜோஸ் பட்லர்!

Jos Buttler sets Guinness World Record for highest catch of 122 metre : 122 M, ட்ரோன் மூலம் கீழே வீசப்பட்ட பந்தை லாவகமாக கேட்ச் பிடித்து கின்னஸ் சாதனை படைத்த வீரர்.

S Kavitha

Highest cricket catch: Jos Buttler featured in Guinness World Records!

ஜோஸ் பட்லர்:

Jos Buttler sets Guinness World Record for highest catch of 122 metre : 122 மீட்டர் உயரத்திலிருந்து கீழே போடப்பட்ட பந்தை, லாவகமாக கேட்ச் பிடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னனி வீரரான ஜோஸ் பட்லர்.

கிரிக்கெட்டில் கின்னஸ் சாதனைகள்

கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை நிறைய கின்னஸ் சாதனைகள் செய்யப்பட்டுள்ளது. அதாவது அதிக ரன் எடுப்பது, விக்கெட் எடுத்தது, ஒருநாள் போட்டியில் அதிக ரன், மிக நீண்ட போட்டி, வேகமான பந்து வீச்சு என ஏராளமான கின்னஸ் சாதனைகள் உள்ளன.

லாவகமான கேட்ச்:

ஆனால் கிரிக்கெட் வரலாற்றில் இவ்வளவு உயரத்தில் இருந்து ட்ரோன் மூலம் போடப்பட்ட பந்தை லாவகமாக கேட்ச் பிடித்தது இதுதான் முதல்முறை.

முந்தைய கின்னஸ் பதிவை தகர்த்திய ஜோஸ்:

ஏனென்றால் 2021 ஆம் ஆண்டு 119.86 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்த பந்தை கேட்ச் பிடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர் ஆஸ்திரேலிய வீரரான திமோதி ஹானன் ஜெபசீலன். இவரது முந்தைய கின்னஸ் பதிவை தற்போது ஜோஸ் பட்லர் தகர்த்தியுள்ளார்.

Highest cricket catch:

ஹையெஸ்ட் கிரிக்கெட் கேட்ச் என்ற பிரிவில் இந்த சாதனையானது இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட்டில் முக்கியமான கின்னஸ் சாதனைகள் சில உங்கள் பார்வைக்கு

சச்சின் டெண்டுல்கர்:

ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் (18,426 ) எடுத்து கின்னஸ் சாதனை செய்துள்ளார்.

1990 முதல் 2012 வரை 51 டெஸ்ட் மற்றும் 49 ஒருநாள் என 100 சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

ரோஹித் சர்மா:

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் என்ற கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்து, அதிக சிக்ஸர்கள் ( 582 ) அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ரோஹித் சர்மா.

விராட் கோலி:

ஒருநாள் டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் , டெஸ்ட் கேப்டனாக அதிக இரட்டை சதங்கள், ஒருநாள் போட்டிகளில் வேகமான ரன்கள் மற்றும் ஒருநாள் உலக கோப்பை பதிப்பில் அதிக ரன்கள் என விராட் கோலி பல சாதனைகளை படைத்துள்ளார்.

ஆர்யன் ஷர்மா;

ஆர்யன் ஷர்மா, ஒரு விரலில் கிரிக்கெட் மட்டையை ஒரு மணி நேரம் பதினாறி நிமிடங்கள் 19 வினாடிகள் சமநிலைப்படுத்தி சாதனை படைத்துள்ளார்.

ஆண்ட்ரூ நார்த்கோட்

UK2 வீரர் ஆண்ட்ரூ நார்த்கோட் ஐம்பது மணி நேரம் 14 நிமிடங்கள் 36 வினாடிகள் என மிக நீண்ட தனிநபர் நிகர அமர்விற்கான சாதனை படைத்துள்ளார்.