மகளிர் யூரோ கோப்பை கால்பந்து :
England Wins Women's Football Euro Final 2025 : சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான, 14வது யூரோ கோப்பை மகளிர் கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. இறுதிப் போட்டியில், ஸ்பெயின் - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 2022ல் நடைபெற்ற மகளிர் யூரோ கோப்பை தொடரில் முதன்முறையாக பட்டம் வென்றிருந்த இங்கிலாந்து, கெத்தாக களமிறங்கியது.
ஸ்பெயின் ஆதிக்கம் :
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், பந்தை பெரும்பாலும் தன் வசம் வைத்திருந்தது ஸ்பெயின். ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் ஸ்பெயின் தரப்பில் கால்டென்டே கோல் பதிவு செய்தார். பின்னர் இங்கிலாந்து அணி தரப்பில் ரூசோ 57வது நிமிடத்தில் கோல் அடித்து, ஆட்டத்தை சமன்படுத்தினார்.
கோல் பதிவு செய்ய தவறிய அணிகள் :
இரு அணிகளும் கடுமையாக மோதிய போதும், இறுதிவரை வேறு கோல் எதையும் அடிக்க முடியவில்லை. பின்னர் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்திலும் இரு அணியின் தரப்பிலும் கோல் பதிவு செய்யப்படவில்லை. பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் நடத்தப்பட்டது.
மேலும் படிக்க : மகளிர் செஸ் சாம்பியன் கோப்பை : வரலாறு படைக்கிறது இந்தியா
பெனால்டி ஷூட் மூலம் வெற்றி :
இதில் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்று யூரோ சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது. 12 ஆண்டுகளுக்கு சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்ட பெருமை இங்கிலாந்து அணிக்கு கிடைத்துள்ளது.
======