ICC T20 World Cup India - England Match
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டி20 உலகக் கோப்பைத் தொடர்
டி20 உலகக் கோப்பை போட்டியின் தொடக்கத்தில் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணியாக கருதப்பட்ட இந்தியா, தென்னாப்பிரிக்கா அணியுடனான தோல்விக்குப் பிறகு சற்று தடுமாற்றத்தைச் சந்தித்தது. எனினும், அதிலிருந்து மீண்டு தற்போது அரையிறுதிக்கு வந்திருக்கிறது.
இந்தியா - இங்கிலாந்து அணி மோதல்
இந்நிலையில் இன்று இரவு ஏழு மணியளவில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி மோதுகிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெரும் அணியினர் தான் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் எக்ஸ் பதிவு
இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 𝙀𝙫𝙚𝙧𝙮𝙩𝙝𝙞𝙣𝙜 𝙀𝙫𝙚𝙣. 𝙉𝙤𝙩𝙝𝙞𝙣𝙜 𝙎𝙚𝙩𝙩𝙡𝙚𝙙. என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவு கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
அந்த பதிவில், டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இரு அணிகளுமே வென்றுள்ளதாக பதிவிட்டுள்ளது.
சம புள்ளிகளில் இந்தியா - இங்கிலாந்து
மேலும் டி 20 உலகக் கோப்பையில் இரு அணிகளும் 5 முறை நாக்-அவுட், வான்கடே மைதானத்தில் தலா ஒருமுறை வெற்றி, நடப்பு உலகக் கோப்பையில் இரு அணிகளும் 6 முறை வெற்றி, ஒரே ஒரு முறை தோல்வி,
ஐசிசி உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில் தலா இரண்டு முறை வெற்றி என குறிப்பிட்டுள்ளனர்.
இறுதி போட்டிக்கு செல்லப்போவது யார்?
இதனால் இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது எந்த அணி என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இதுவரை இந்தியா - இங்கிலாந்து அணிகள் 29 சா்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில், இந்தியா 17 வெற்றிகளையும், இங்கிலாந்து 12 வெற்றிகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
====================