Despite Piling Up 209 Runs, CSK Surrenders to Punjab! What Went Wrong for CSK at Chepauk? source : google
விளையாட்டு

மீண்டும் மீண்டும் தோல்வி! : 209 ரன்கள் குவித்தும் பஞ்சாபிடம் சரணடைந்த சிஎஸ்கே! : சேப்பாக்கத்தில் என்ன ஆச்சு?

200 ரன்களுக்கு மேல் எடுத்தும் பஞ்சாப் அணியிடம் சிஎஸ்கே தோல்வியடைவது இது 5-வது முறையாகும்.

S Kavitha

சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி

முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில், சிஎஸ்கே அணி பேட்டிங் செய்து அதிரடியான ஆட்டத்தைத் தொடங்கியது.

சிஎஸ்கே அதிரடி பேட்டிங்

முதலில் பேட் செய்த சென்னை அணிக்குத் தொடக்கம் சற்று பின்னடைவாக இருந்தாலும், இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் குவித்தார்.

இமாலய இலக்கை எட்டியசி எஸ்கே

அதன்பின்னர் களமிறங்கிய சர்ஃபராஸ் கான் 32 ரன்கள் மற்றும் ஷிவம் துபே 45 ரன்கள் என சிஎஸ்கே 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.

பஞ்சாப் அணியின் பதிலடி

210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு பிரியன்ஷ் ஆர்யா 39 ரன்கள் மற்றும் பிரப்சிம்ரன் சிங் 43 ரன்கள் என அதிரடி தொடக்கம் கொடுத்தனர்.

210 ரன்கள் எடுத்து அபார வெற்றி

பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பொறுப்பாக விளையாடி 50 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் பஞ்சாப் அணி 18.4 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் விருது

அதிரடியாகத் தொடக்கம் கொடுத்த பஞ்சாப் அணியின் பிரியன்ஷ் ஆர்யா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிஎஸ்கே அணியின் தொடர் போராட்டம்

பஞ்சாப் அணிக்கு எதிராக சிஎஸ்கே 200+ ரன்களைக் குவிப்பது இது 6-வது முறையாகும். அதேநேரத்தில் 200 ரன்களுக்கு மேல் எடுத்தும் பஞ்சாப் அணியிடம் சிஎஸ்கே தோல்வியடைவது இது 5-வது முறையாகும்.

சிஎஸ்கே ரசிகர்கள் சோகம்

மேலும், சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே சந்திக்கும் தொடர்ச்சியான 5-வது தோல்வி இதுவாகும். இதனால் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணிக்கு என்ன தான் ஆச்சு என்று சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

பெங்களூரில் நாளைய போட்டி

இரண்டு தொடர் தோல்விகளுக்குப் பின் சிஎஸ்கே அணி நாளை (ஏப்ரல் 5) பெங்களூருவில் ஆர்சிபி அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டியில நிச்சயமாக சிஎஸ்கே அணி வெற்றிபெரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.