உலகக்கோப்பை இறுதிப்போட்டி
உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில், அர்ஜென்டினா - ஸ்பெயின் மோத உள்ளன. கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
மெஸ்ஸி vs லமின் யமால்
இதைவிட முக்கியமாக இப்போது பேசப்படுவது, மெஸ்ஸி-லமின் யமால் பற்றிதான். அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, 20 ஆண்டுகளுக்கு முன்பு 6 மாத குழந்தையோடு புகைப்படம் எடுத்து இருந்தார்.
இந்தக் குழந்தையை எதிர்த்து தான் இறுதிப்போட்டியில் மெஸ்ஸி விளையாட இருக்கிறார். வரலாறு திரும்பும் என்று சொல்வது போல, 20 ஆண்டுகளுக்கு முன்பு மெஸ்ஸியும், லமின் யமாலும் இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்து இருக்கவே மாட்டார்கள். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
18 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படம்
தொண்டு நிறுவனத்திற்கான போட்டோசூட்டில் ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டிருப்பது போலவும, பிளாஸ்டிக் டப்பில் குளிப்பாட்டுவது போலவும் புகைப்படம் எடுத்திருப்பார்.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடந்த போட்டோசூட்டில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.
6 மாத குழந்தை லமின் யமால்
அப்போது 6 மாத குழந்தையாக லமின் யமால் தான், தற்போது ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரராக வலம் வருகிறார். 19 வயதான லமின் யமால் மீது பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.
கால்பந்து உலகில் சூப்பர் போட்டோ
யமால் குழந்தையாக இருந்தபோது, 20 வயது மெஸ்ஸி எடுத்த போட்டோசூட் Joan Monfort என்பவருக்கு இது வருங்காலத்தில் கால்பந்து உலகில் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படமாக மாறும் என யாருக்கும் தெரியாது.
லமின் யமால் ஆறு மாதமாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தில், மெஸ்ஸி இளம் நட்சத்திர வீரராக இருப்பார். மெஸ்ஸி அன்று இருந்த அந்த நட்சத்திர வீரர் அந்தஸ்தில் யமால் தற்போது இருக்கிறார்.
பார்சிலோனாவின் சிங்கங்கள்
இதில் இன்னொரு அற்புதமான விஷயம் என்னவென்றால் இருவருமே பார்சிலோனா கிளப் அணியைச் சேர்ந்தவர்கள். யமால் தற்போது பார்சிலோனாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். மெஸ்ஸி அப்போது அணிந்திருந்த 10ஆம் நம்பர் ஜெர்ஸியைதான் யமால் தற்போது அணிகிறார்.
2024 வெளியான புகைப்படங்கள்
இந்த புகைப்படங்களை லமின் யமாலின் தந்தை 2024ம் ஆண்டில் இணையத்தில் பகிர்ந்தார். அப்போதும் இந்த புகைப்படங்கள் வைரலாகின.
தற்போது பிபா உலகக் கோப்பை 2026 தொடரில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸியும், ஸ்பெயினின் லமின் யமாலும் விளையாட இருப்பதால் இவை மீண்டும் வைரலாகி வருகின்றன.
=======