உலக கோப்பையில் 20 கோல், புதிய சாதனை
உலக கோப்பைகால்பந்து வரலாற்றில் 20 கோல்கள் அடித்த உலகின் முதல் மற்றும் ஒரே வீரர் என்ற வரலாற்று சாதனையை லியோனல் மெஸ்ஸி படைத்துள்ளார்.
இதற்கு முன்பே உலகக்கோப்பையில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் தன்வசம் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது
அர்ஜெண்டினாவின் அசைக்க முடியாத வீரர்
சர்வதேச கால்பந்து அரங்கில் அசைக்க முடியாத ஜாம்பவான்களின் ஒருவராகத் திகழும் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி
, தற்பொழுது நடைபெற்று வரும் 2026 பிபா உலககோப்பையில் முதல் ஹாட்ரிக் கோலை அடித்து சாதனை படைத்துள்ளார் மெஸ்ஸி
அர்ஜெண்டினா vs அல்ஜீரியா
நடந்து வரும் உலக்கோப்பை கால்பந்தில் குரூப் ஜெ பிரிவில் இடம்பெற்றுள்ள நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா மற்றும் அல்ஜீரியா அணிகள் இடையே லீக் போட்டி நடைபெற்றது.
இந்தப்போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த அர்ஜெண்டினா அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருக்கிறது
ரசிகர்களிடையே நிலவும் எதிர்ப்பார்ப்பு
20 ஆண்டுகளாக உலகக்கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். இந்தநிலையில் , இந்த உலகக்கோப்பைத் தொடரில் அர்ஜென்டினாவின் முதல் லீக் போட்டி இன்று நடைபெற்ற நிலையில்,
இந்தப் போட்டியின் மீது மெஸ்ஸி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அதனை நிரூபித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் மெஸ்ஸி
குறிப்பாக இப்போட்டியில் அர்ஜென்டினாவின் வெற்றி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்யும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அபார கோல் அடித்து சாதனை படைத்துள்ளார்
=======================