FIFA World Cup Football: Participation of player Samuel Muthusamy, of Indian origin.  google
விளையாட்டு

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து : ”இந்திய வம்சாவளியை சேர்ந்த வீரர் சாமுவேல் முத்துசாமி” பங்கேற்பு...!

நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காங்கோ அணிக்காக ஸ்டார்டிங் லெவனில் களம் காணும் தமிழ் வம்சாவளி வீரரான சாமுவேல் முத்துசாமி.

Rohini

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து : இந்திய வம்சாவளி பங்கேற்பு

நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காங்கோ அணிக்காக ஸ்டார்டிங் லெவனில் தமிழ் வம்சாவளி வீரரான சாமுவேல் முத்துசாமி. என்பவர் பங்கேற்று விளையாடி வருகிறார்.

கே பிரிவில் மோதும் போர்ச்சுகல் vs காங்கோ அணிகள்

இந்த இந்திய வம்சாவளியான இவர் நடப்புத்தொடரில் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஹியூஸ்டனில் ‘கே’ பிரிவில் உள்ள போர்ச்சுகல் மற்றும் காங்கோ அணிகள் இந்த தொடரில் மோதின.

இந்த நிலையில் இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது மேலும் சாம்பியன் படம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக போர்ச்சுகல் இருப்பதாக கால்பந்து ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

யார் இந்த சாமுவேல் முத்துசாமி?

காங்கோ அணிக்காக இந்த ஆட்டத்தின் ஸ்டார்டிங் லெவனில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த சாமுவேல் முத்துசாமி விளையாடினார்

29 வயதான நடுகள வீரரான சாமுவேல் முத்துசாமி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் பிறந்தவர். இவரது தாய் காங்கோ நாட்டைச் சேர்ந்தவர்.

தந்தை கரீபியன் தீவுகளில் ஒன்றான குவாதலூப்பைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளி ஆவார். 19-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் இருந்து குவாதலூப்புக்கு இவரது முன்னோர்கள் குடிபெயர்ந்துள்ளனர்

கடந்த 2019 முதல் காங்கோ அணிக்காக சர்வதேச அளவிலான கால்பந்து ஆட்டங்களில் விளையாடி வரும் இவர் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடிய அனுபவம் கொண்டவராகவும் திகழ்கிறார்

இதுவரை காங்கோ அணி பங்கேற்ற விளையாட்டு விவரம்

கடைசியாக காங்கோ அணி கடந்த 1974 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று இருந்தது. அதுதான் அந்த அணியின் முதல் உலகக் கோப்பை தொடராகும் , அதன் பின்னர் சுமார் அரை நூற்றாண்டு காலம் கடந்து நடப்பு உலகக் கோப்பை தொடரில் காங்கோ பங்கேற்று வருகிறது

முதல் கோலை பதிவு செய்த காங்கோ அணி

முக்கியமாக உலகக் கோப்பை வரலாற்றில் காங்கோ அணி முதல் கோலையும் பதிவு செய்தது. அந்த அணியின் வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆட்டத்தில் சாமுவேல் முத்துசாமி விளையாடி இருக்கிறார் இந்த ஆட்டத்தில் அவருக்கு 5.5 ரேட்டிங் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்த்கக்து.

============================