first T20 match between India and Ireland takes place today in Belfast bcci twitter
விளையாட்டு

India vs Ireland : பெல்பாஸ்ட் நகரில் முதல் டி20 போட்டி : சர்வதேச போட்டியில் களமிறங்கும் வைபவ் சூர்யவன்ஷி...!

இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, பெல்பாஸ்ட் நகரில் இன்று நடைபெறுகிறது.

Kannan

அயர்லாந்தில் இந்திய அணி

அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது, பெல்பாஸ்டில் இன்றும் நாளை மறுநாளும் நடைபெற உள்ளன.

இந்தியா இங்கிலாந்து மோதல்

இந்த தொடரைத் தொடர்ந்து, இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையே 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.

கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர்

இந்திய அணிக்கு ஷ்ரேயாஸ் அய்யர் முதல் முறையாக கேப்டன் பொறுப்பேற்றுள்ளார்.

15 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி இந்திய சீனியர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரன் மிஷின் வைபவ் சூர்யவன்ஷி

ஐபிஎல் தொடர் மற்றும் சமீபத்தில் இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடரில் சூரியவன்ஷியின் ஆட்டம், உலக அளவில் ரசிகர்கள் மட்டுமல்லாது கிரிக்கெட் பிரபலங்களும் வியந்து பாராட்டும் அளவுக்கு இருக்கிறது.

இன்று விளையாடுவாரா சூர்யவன்ஷி?

இந்த நிலையில், அயர்லாந்துடன் இன்று நடக்க உள்ள முதல் டி20ல் அவர் அறிமுகவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சாம்சன், அபிஷேக், இஷான், ஷ்ரேயாஸ் என அதிரடி பேட்ஸ்மேன்கள் அணிவகுப்பதால் சூரியவன்ஷிக்கு இடம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா?

அயர்லாந்து அணி புது கேப்டன் லோர்கன் டக்கருடன் களம் இறங்குகிறது. இரு அணிகளும் இதற்கு முன் 8 முறை டி.20 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் அனைத்திலும் இந்தியா தான் வென்றுள்ளது.

===============