Gukesh Defeat Praggnanandhaa 
விளையாட்டு

கிராண்ட் செஸ் தொடர் : பிரக்ஞானந்தாவை வென்றார் குகேஷ்

கிராண்ட் செஸ் தொடரில் பிரக்ஞானந்தாவை தோற்கடித்தார் மற்றொரு இந்திய வீரரான குகேஷ்.

Kannan

கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசன் குரேஷியாவில் நடைபெற்று வருகிறது. உலகின் முன்னணி செஸ் வீரர்களான இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் உட்பட 10 பேர் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

'ரேபிட்' முறையில் போட்டி :

முதலில் 'ரேபிட்' முறையில் போட்டி நடக்கிறது. முதல் நாளில் 3 சுற்று போட்டிகள் நடந்தன. முதல் சுற்றில் குகேஷ், போலந்தின் ஜான் டுடாவிடம் தோல்வியடைந்தார். பின் சுதாரித்த குகேஷ், அடுத்த சுற்றில் பிரான்சின் அலிரேசாவை வென்றார். 3வது சுற்றில் குகேஷ் - பிரக்ஞானந்தா மோதினர்.

குகேஷ் - பிரக்ஞானந்தா மோதல் :

கருப்பு நிறக் காய்களுடன் களமிறங்கிய குகேஷ், 38 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். முதல் 3 சுற்றுகளின் முடிவில் கார்ல்சன் (4.0), ஜான் டுடா (4.0), அமெரிக்காவின் வெஸ்லே (4.0), குகேஷ் (4.0) 'டாப்-4' இடங்களில் உள்ளனர்.

முதல் இரு சுற்றுகளை 'டிரா' செய்த பிரக்ஞானந்தா (2.0) கடைசி இடத்தில் (10) உள்ளார்.

====