தொடர் வெற்றியை தன் வசப்படுத்திய இந்தியா
இந்திய அணி 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையை எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி வெற்றியை கைப்பற்றியிருந்தது
அதனை தொடர்ந்து 2024-ம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது.
இந்த வரிசையில் தற்போது 2026-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெற்றி குறித்து பகிர்ந்து கொண்ட சூர்யகுமார் யாதவ்
டி20 உலகக் கோப்பையை 2024 மற்றும் 2026 என அடுத்தடுத்து வெல்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது மிகச்சிறந்த உணர்வு. நாங்கள் 2024-ல் வென்றபோது, மீண்டும் ஒருமுறை 2026-ல் நமது சொந்த மண்ணிலேயே வென்றால் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று நினைத்திருந்தோம் அதன்படியே வென்றும் விட்டோம் என்றும்
மேலும் படிக்க : டி20 உலககோப்பை 2026: அதிக ரன்கள், அதிக சிக்சர்கள், அதிக விக்கெட் எடுத்த வீரர்களின் முழு விவரம் இதோ!
அடுத்த இலக்கு 2028 ஒலிம்பிக்
அடுத்த இலக்கு 2028-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வதுதான். இந்திய அணி தற்போது நல்ல உத்வேகத்துடன் உள்ளது. 2028-ம் ஆண்டில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையையும் இந்திய அணி வென்றால், மிகவும் சிறப்பாக இருக்கும் என்றும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்
இந்திய அணியின் கேப்டனாக இருப்பதில் பெருமிதம் கொள்ளகிறேன்-சூர்யகுமார் யாதவ்
டி20 உலகக் கோப்பையை வென்ற கேப்டன்களில் ரோஹித் சர்மா மற்றும் தோனி ஆகியோரது வரிசையில் நானும் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இவர்களுடன் இணைந்துள்ள தருணத்தை நான் மெல்ல உணரத் தொடங்குகிறேன் ,
மிகப் பெரிய வீரர்களான இவர்களுடன் நானும் இடம்பெறுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எதிர்காலத்திலும் நான் இதையே செய்ய முயற்சிப்பேன், இந்திய அணி அதிக கோப்பைகளை வெல்ல தொடர்ந்து உதவுவேன் என்று மகிழ்ச்சியாக பகிர்ந்துகொண்டார் .
மேலும் படிக்க : T20 உலகக் கோப்பை வெற்றி : இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு: பிசிசிஐ அறிவிப்பு!