History made in Test cricket match against Pakistan, ball split in two, two England players claimed five wickets each AI generated
விளையாட்டு

”கிரிக்கெட் வரலாற்றில் சாதனை” : இங்கிலாந்தின் இரண்டு வீரர்கள், தலா 5 விக்கெட்டுகள் : 2 ஆக வெட்டப்பட்ட பந்து..!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் 2 வீரர்கள் தலா 5 விக்கெட்டுகளை சாய்த்ததால், பந்து இரண்டாக வெட்டப்பட்டு வரலாறு படைக்கப்பட்டது.

Kannan

History was made during the Test cricket match against Pakistan when the ball split in two after two England players claimed five wickets each

டெஸ்ட் கிரிக்கெட் மரபு

டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைப்பிடிக்கப்படும் பழமையான மரபுகளில் ஒன்று, ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் பந்துவீச்சாளர் தான் பயன்படுத்திய பந்தை தனதாக்கி கொள்வார்.

டெஸ்ட் கிரிக்கெட் - தலா 5 விக்கெட்டுகள்

ஆனால் இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியில், வித்தியாசமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் தலா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதால், பந்து யாருக்குச் சொந்தமாகும்? என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

இங்கிலாந்து பவுலர்கள் அசத்தல்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை இந்த சிக்கல் வந்தது கிடையாது. அப்போது இரண்டு பவுலர்கள், அதாவது இங்கிலாந்து பந்து வீச்சாளர்களான ஆலி ராபின்சன் மற்றும் ஜோஷ் டங் ஆகோயிர் வித்தியாசமான ஒரு முடிவுக்கு வந்தனர்.

இரண்டாக வெட்டப்பட்ட பந்து

எப்படி மைதானத்தில் இரட்டை குழல் துப்பாக்கி போன்று செயல்பட்டு, பாகிஸ்தான் விக்கெட்டுகளை வீழ்த்தினார்களோ அதேபோன்று, பந்தை தாங்களே வைத்துக்கொள்ள திட்டமிட்டனர்.

அது எப்படி சாத்தியம்? என்ற கேள்வி எழவே ராபின்சன், பந்தை இரண்டாக வெட்டி வைத்துக் கொள்வோம் என்ற முடிவை டங்கிடம் கூறினார். இருவரும் அதை ஏற்றுக் கொண்டபிறகு பந்தை இரண்டாக வெட்டி பிரித்துக் கொண்டனர்.

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறை

கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக அரங்கேறிய இச்சம்பவம் வியப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 2 இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தனர்.

20 ஆண்டுகளுக்கு முன்பும் சம்பவம்

இதில் குறிப்பிடும் வியப்பு என்னவென்றால் 2006ஆம் ஆண்டும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தான் அந்த சம்பவமும் நடந்திருந்தது. 2006-ல் நடந்த டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஹார்மிசன் மற்றும் மான்டி பனேசர் இருவரும் தலா 5 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

===============