ICC has announced that Bangladesh's matches in the T20 World Cup cannot be changed 
விளையாட்டு

T20 World Cup: ”அட்டவணைப்படி போட்டிகள்”: வங்கதேசத்திற்கு ICC செக்

டி20 உலகக் கோப்பையில் வங்கதேச போட்டிகளை மாற்ற முடியாது என்று, ஐசிசி அதிரடி அறிவித்துள்ளது.

Kannan

டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட்

டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் பிப்​ர​வரி 7ம் தேதி தொடங்கி, இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் நடைபெறுகிறது. 20 அணி​கள் கலந்துகொள்​ளும் இந்​தத் தொடரில் வங்​கதேச அணி ‘சி’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. அந்த அணி பங்​கேற்​கும் லீக் ஆட்​டங்​கள் கொல்​கத்​தா, மும்பை​யில் நடை​பெறுகிறது.

இந்தியாவில் விளையாட வங்கதேசம் எதிர்ப்பு

இந்​நிலை​யில் இந்​தி​யா​வில் தங்​களது அணிக்கு பாதுகாப்பு இருக்​காது என்​றும் அதனால் டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் வங்கதேசம் விளை​யாடும் போட்​டிகளை இலங்​கைக்கு மாற்ற வேண்​டும் என ஐசிசியிடம் வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யம் கோரிக்கை வைத்தது. ஆனால் வங்​கதேசத்​தின் குற்​றச்​சாட்டு மீது எந்தவித உண்​மை​யும் இல்​லை.

பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை

வங்​கதேச அணிக்கு இந்​தி​யா​வில் எந்​த​வித பாது​காப்பு அச்சுறுத்​தலும் இல்லை என ஐசிசி தெரி​வித்​தது. போட்டி தொடங்​கு​வதற்கு சில வாரங்​களே உள்​ள​தால் அட்டவணை, பயண விவரங்​களை மாற்ற முடி​யாது என தெரிவிக்​கப்​பட்​டது.

வங்கதேசத்திற்கு ஐசிசி எச்சரிக்கை

மேலும் நேற்​றைக்​குள் (21-ம் தேதி) டி20 உலகக் கோப்​பை​யில் பங்​கேற்​பது குறித்து தங்​களது முடிவை வங்​கதேசம் அறிவிக்க வேண்​டும் எனவும் இல்லை​யென்​றால் மாற்று அணி​யாக ஸ்காட்​லாந்து சேர்க்கப்​படும் எனவும் ஐசிசி தரப்​பில் எச்​சரிக்கை விடுக்கப்​பட்​டிருந்​தது.

ஐசிசி ஆலோசனை

இந்​நிலை​யில் சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சில் கூட்​டம் நடை​பெற்​றது.அப்​போது வங்​கதேச வாரி​யம் தரப்​பில் வைக்​கப்​பட்​டுள்ள போட்டி இடமாற்ற கோரிக்கை தொடர்​பாக வாக்கெடுப்பு நடத்​தப்​பட்​டது.

பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்ப்பு

இதில் 16 உறுப்​பினர்​களில் வங்​கதேசம், பாகிஸ்​தானை தவிர மற்ற அனைவரும் இடமாற்ற கோரிக்​கைக்கு எதிராக வாக்​களித்​தனர். மேலும் வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யத்​துக்கு கூடு​தலாக ஒரு​நாள் அவகாசம் அளிக்​க​வும் முடிவு செய்​யப்​பட்​டது.

அட்டவணையில் மாற்றமில்லை - ஐசிசி

மேலும் இந்​தி​யா​வில் வங்​கதேசத்​துக்கு பாது​காப்​பில் குறை​வில்லை என்​றும் கடைசி நேரத்​தில் போட்​டிகளை மாற்ற முடி​யாது என்​றும் ஐசிசி சார்​பில் திட்டவட்டமாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுபற்றி, ஐசிசி வெளி​யிட்​டுள்ள அறிக்கையில், “இந்​தச் சூழ்​நிலை​யில் போட்​டிகளை இடம் மாற்​று​வது ஐசிசி-​யின் புனிதத் தன்​மைக்கு ஊறு விளை​விப்​ப​தாக அமை​யும். மேலும், உலக அரங்​கில் ஐசிசி​யின் நடுநிலைத்​தன்​மைக்​கு பாதக​மாக அமை​யும்​” எனத்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

நெருக்கடியில் வங்கதேசம்

எனவே, திட்டமிடப்பட்ட அட்டவணையின் படி வங்கதேசம் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டும். அல்லது வெளியேற வேண்டி இருக்கும்.

===========================