ICC has approved the decision that players from both countries will not shake hands during the India-Pakistan match in the World Cup Source : Jio Hotstar - India vs Pakistan Match Highlights
விளையாட்டு

IND vs PAK : வீரர்கள் கைகுலுக்கல் கிடையாது : ICC ஒப்புதல்

India vs Pakistan Match in T20 World Cup 2026 : டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது இருநாட்டு வீரர்களும் கைகுலுக்க மாட்டார்கள் என்ற முடிவுக்கு ஐசிசி ஒப்புதல் தந்திருக்கிறது.

Kannan

டி20 உலகக் கோப்பை தொடர்

India vs Pakistan Match in T20 World Cup 2026 : டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க போவதாக பாகிஸ்தான் அறிவித்து இருந்தது. இதன் காரணமாக 4,500 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானுக்கு ஐசிசி எச்சரிக்கை

பாகிஸ்தானின் இந்த முடிவை வன்மையாக கண்டித்து இருந்த ஐசிசி, இதன்காரணமாக ஏற்படும் விளைவுகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பொறுப்பு ஏற்க வேண்டி இருக்கும் என்று எச்சரித்தது.

வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவித்த பாகிஸ்தான், அந்நாட்டு அணி இந்தியாவில் விளையாட மறுத்த விவகாரத்தில் ஆதரவு தெரிவிக்கவே போட்டியைப் புறக்கணிக்கப் போவதாக ஆரம்பத்தில் கூறியது.

தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான்

வங்கதேசம் என்ற போர்வையில் பாகிஸ்தான், இந்தியாவை சிக்க வைக்க எல்லா வழிகளிலும் முயன்றது. ஆனால் அவர்களுக்கு யாரும் ஆதரவு கரம் நீட்டாததால், பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டது.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி

இதைத்தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட பாகிஸ்தான் ஒப்புக் கொண்டது. அதன்படி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி பிப்ரவரி 15ம் தேதி கொழும்பு மைதானத்தில் நடைபெற உள்ளது.

வீரர்கள் கைகுலுக்கல் இருக்குமா?

இதுபோன்ற சூழ்நிலையில், பிப்ரவரி 15ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்குவார்களா என்பது கேள்வியாக உள்ளது.

பாக். நிபந்தனை - ஐசிசி நிராகரிப்பு

லாகூரில் நடந்த ஐசிசி உடனான சந்திப்பில், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்க வேண்டும் என்ற நிபந்தனையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதித்திருந்தது. ஆனால் இதை ஐ.சி.சி புறக்கணித்துள்ளது.

வீரர்கள் கைகுலுக்க மாட்டார்கள்

பாகிஸ்தானின் இந்த நிபந்தனை அவர்களின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்பதால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐ.சி.சி தெளிவுபடுத்தியுள்ளது. இதன்மூலம் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்க மாட்டார்கள் எனத் தெளிவாகிறது.

பாக். உடன் கைகுலுக்க மறுக்கும் இந்தியா

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்திய அணிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆசிய கோப்பை போட்டியில் கைகுலுக்கக் கூடாது என்ற பாரம்பரியத்தைத் தொடங்கினார்.

இந்த நடைமுறை பல்வேறு போட்டிகளில் தொடர்ந்தது. பெண்கள் உலகக் கோப்பை, ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியா கோப்பை மற்றும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையிலும் கைகுலுக்கி கொள்ளவில்லை.

பாக். கனவு தகர்ப்பு

இதை பெரிய பிரச்னையாக உருவாக்க பாகிஸ்தான் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தது, ஆனால் ஐசிசி விதியின் படி, வீரர்களை கைகுலுக்க கட்டாயப்படுத்த முடியாது.

"மைதானத்தில் கைகுலுக்குவது என்பது ஒரு நற்பண்பு சார்ந்த நடைமுறையே தவிர, அது கிரிக்கெட் விதிமுறைப் புத்தகத்தில் கட்டாயமான சட்டம் கிடையாது" என்பது குறிப்பிடத்தக்கது.

===============