ICC T20 WORLD CUP 2026 India beats England stunning victory, enters India vs New Zealand T20 World Cup Final 2026 Date source: Bcci,x.com
விளையாட்டு

India vs New Zealand T20 Final 2026 : இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி, இறுதிப்போட்டியில் இந்தியா!

India vs New Zealand T20 World Cup Final 2026 Date : மார்ச் 8 ஆம் தேதி நடைபெறும் டி20 உலக கோப்பை இறுதிஆட்டத்தில் இந்தியா அணி நியூஸிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

S Kavitha

ICC T20 WORLD CUP 2026

India vs New Zealand T20 World Cup Final 2026 Date : ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நேற்று மாலை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இந்தியா - இங்கிலாந்து மோதல்

இந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின. இதில் முதலில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றது.

இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி ப்ரூக் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதனால் முதலில் பேட்டிங் செய்து ஆடிய இந்திய அணி 254 எனும் இமாலய இலக்கை நிர்ணயித்தது.

இங்கிலாந்து பேட்டர்கள் அதிரடியாக ஆடியபோதும் இந்தியா நிர்ணயித்த 254 இலக்கை எட்ட முடியவில்லை.

இந்தியாவின் இலக்கை அடைய இங்கிலாந்திற்கு கடைசி இரண்டு ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கடையில் இங்கிலாந்து அணியால் 20 ஓவர்களில் 246 ரன்கள் மட்டுமே குவித்தது.

7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்று டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மார்ச் 8-ல் இறுதிப்போட்டி

இதனையடுத்து, வரும் மார்ச் 8 ஆம் தேதி நடைபெறும் டி20 உலக கோப்பை இறுதிஆட்டத்தில் இந்தியா அணி நியூஸிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்தியா vs நியூஸிலாந்து இறுதிப் போட்டிக்காக ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

முன்னதாக தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா முதலில் களமிறங்கினர். இந்த ஆட்டத்தின் போது சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடு அரைசதம் விளாசினார்.

சூர்யகுமார் யாதவ் களமிறங்குவார் என ரசிகர்கள் காத்திருந்த போது எதிர்பாரா விதமாக ஷிவம் துபே களமிறங்கி சிக்ஸர்கள் விளாசி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார்.