ICC Women's ODI Rankings 2025 Laura Wolvaardt Dethrones Smriti Mandhana To Become No.1 Batter Check Full Rank List ICC
விளையாட்டு

ஐசிசி தரவரிசை- முதலிடத்தில் தென்னாப்பிரிக்க வீராங்கனை

ICC Women's ODI Rankings 2025 : ஐசிசி மகளிருக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Bala Murugan

முதல் வெற்றி

ICC Women's ODI Rankings 2025 : இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற மகளிருக்கான உலகக் கோப்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நிறைவடைந்தது. இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்திய அணி முதன்முறையாக வெற்றியை பதிவு செய்து, கோப்பைக்கு முத்தமிட்டது.

தொடர்ந்து போராடிய தென்னாப்பிரிக்கா

அதிரடியாக ஆடி கடைசிவரைப் போராடிய தென்னாப்பிரிக்க அணி கேப்டன் லாரா வோல்வார்ட் 101 ரன்கள் எடுத்தும், அவரது அணிக்கு பலன் இல்லாமல் போனது. இறுதிப்போட்டி மட்டுமின்றி இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் அதிரடி ஆட்டத்தைக் காண்பித்த லாரா வோல்வார்ட் 167 ரன்கள் குவித்திருந்தார். மேலும், ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் மட்டும் 571 ரன்களைக் குவித்து புதிய சாதனையும் படைத்தார்.தொடரில் தோல்வியடைந்தாலும், அவரின் கடின உழைப்பால் முதலிடத்தை தழுவி வெற்றி கிடைத்துள்ளது என்பதை உணர்த்தும் வகையில் ஐசிசி தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஐசிசி வெளியிட்ட தரவரிசை பட்டியல்

அதன்படி, ஐசிசி மகளிருக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் தனது அதிரடியைக்காட்டிய லாரா வோல்வார்ட், 814 புள்ளிகளுடன் இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவைப் பின்னுக்குத்தள்ளி முதல் முறையாக தனது சிறந்த தரநிலையுடன் முதலிடத்துக்கு லாரா வோல்வார்ட் முன்னேறியுள்ளார்.

இரண்டாம் இடத்தில் இந்திய வீரர்

இவரை தொடர்ந்து இந்திய அணியின் வீரரான ஸ்மிருதி ஒரு இடம் சரிந்து 811 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய நிர்ணயித்த 339 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து 127 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக 9 இடங்கள் முன்னேறி 658 புள்ளிகளுடன் 10 வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லீஸ் பெர்ரி 3 இடங்கள் முன்னேறி நியூசிலாந்து வீராங்கனை சோஃபி டிவைனுடன் 7 இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். தோல்வியடந்தும் ஐசிசி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது அவரது முயற்சிக்கான கோப்பைதான்.

ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசை

  • லாரா வோல்வார்ட் - 814 புள்ளிகள்

  • ஸ்மிருதி மந்தனா - 811 புள்ளிகள்

  • அஷ்லெய் கார்ட்னர் - 738 புள்ளிகள்

  • நாட் ஷிவர் ப்ரண்ட் - 714 புள்ளிகள்

  • பெத் மூனி - 700 புள்ளிகள்

  • அலீசா ஹீலி - 688 புள்ளிகள்

  • சோஃபி டிவைன் - 669 புள்ளிகள்

  • எல்லீஸ் பெர்ரி - 669 புள்ளிகள்

  • ஹேலே மேத்யூஸ்-663 புள்ளிகள்

  • ஜெமிமா ரோட்ரிக்ஸ் - 658 புள்ளிகள் பெற்றுள்ளனர்.