ICC Men's Test Batsman Rankings 2025 in Tamil https://x.com/ICC
விளையாட்டு

ICC Rank : ஐசிசி பேட்ஸ்மேன்கள் தரவரிசை : ஜோ ரூட் மீண்டும் முதலிடம்

ICC Mens Test Batsman Rankings 2025 : ஐசிசி. பேட்ஸ்மேன் தரவரிசையில் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

Kannan

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி :

ICC Mens Test Batsman Rankings 2025 : இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில்(IND vs ENG Test 2025) நடைபெற்றது. பரபரப்பான இந்த போட்டியில் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து, இந்தியா முதல் இன்னிங்சில் 387 ரன்கள் சேர்த்தன. 2ஆவது இன்னிங்சில் இங்கிலாந்து 192 ரன்கள் அடித்தது. 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 170 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

மீண்டும் முதலிடதில் ஜோ ரூட் :

இந்த போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட்(Joe Root) முதல் இன்னிங்சில் சதம் விளாசினார். 2வது இன்னிங்சில் 40 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில்(ICC Test Batsman Rankings) 888 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும் படிக்க : சர்வதேச டென்னிஸ் தரவரிசை : முதலிடத்தில் நீடிக்கும் ஜானிக் சின்னர்

ஜெய்ஸ்வால், ரிஷப், சுப்மன் :

கேன் வில்லியம்சன் 2ம் இடத்திலும், ஹாரி ப்ரூக் 3வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சுப்மன் கில்(Shubman Gill) ஆகியோர் முறையே 5, 8 மற்றும் 9ஆவது இடத்தை பிடித்துள்ளனர். லார்ட்ஸ் மைதானத்தில் சொதப்பில் ஜெய்ஸ்வால் ஒரு இடமும், கேப்டன் சுப்மன் கில் 3 இடங்களும் சரிவை கண்டிருக்கிறார்கள்.

ICC Test Batsman Ranking - தரவரிசைப் பட்டியல் :

1. ஜோ ரூட்(Joe Root) - 888 புள்ளிகள்

2. கேன் வில்லியம்சன்(Kane Williamson) - 867 புள்ளிகள்

3. ஹாரி புரூக்(Harry Brook) - 862 புள்ளிகள்

4. ஸ்டீவ் ஸ்மித்(Steve Smith) - 816 புள்ளிகள்

5. Yashasvi Jaiswal (யஷஸ்வி ஜெய்ஸ்வால்) - 801 புள்ளிகள்

=============