இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் :
India vs England 5th Test Match 2025 Update : இங்கிலாந்து சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட 'ஆண்டர்சன் - சச்சின் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து, 2--1 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் ஐந்தாவது, கடைசி டெஸ்ட் இன்று லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில்(Kennington Oval Stadium) இன்று தொடங்குகிறது.
முக்கியத்துவம் பெற்ற 5வது டெஸ்ட் :
இந்தத்தொடரின் 4 போட்டிகளும், ஐந்து நாட்களும் முழுமையான நடந்தன. முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2 வது டெஸ்ட் போட்டியை இந்தியா வசப்படுத்த, 4வது டெஸ்ட் சர்ச்சையுடன் டிராவில் முடிந்தது. எனவே 5 வது டெஸ்ட் போட்டி(IND vs ENG 5th Test Match) இரண்டு அணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. இங்கிலாந்து வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும். இந்தியா வெற்றி பெற்றார் தொடரை சமன் செய்யும்.
எழுச்சி பெறுமா இந்திய அணி? :
இந்திய அணியை பொறுத்தவரை, தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் எழுச்சி பெற்று ரன்களை குவிக்க வேண்டும். கே. எல். ராகுல்(KL Rahul) நிலைத்து ஆடி அணிக்கு வலுச்சேர்க்க வேண்டும். சாய் சுதர்சன் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி பொறுப்பாக விளையாட வேண்டும். கேப்டன் சுப்மன் கில், 'ஆல் ரவுண்டர்' ரவீந்திர ஜடேஜா அணிக்கு முதுகெலும்பாக திகழ்கின்றனர்.
வேகப்பந்து வீச்சில் சிராஜ் கைகொடுக்கிறார். பணிச்சுமை காரணமாக பும்ரா விலகினால் அர்ஷ்தீப் களமிறங்குவார். மான்செஸ்டரில் இந்தியாவை கரை சேர்க்க கைகொடுத்த வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை கொடுத்தால், இந்தியா வெற்றியுடன் தொடரை நிறைவு செய்யும்.
போப் தலைமையில் இங்கிலாந்து அணி :
கேப்டன் ஸ்டோக்ஸ் காயத்தால் விலகியதால் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணி, போப் தலைமையில் களமிறங்குகிறது. டக்கெட், கிராலே, போப், ஜோ ரூட், புரூக், ஸ்மித் என வலுவன பேட்டிங் வரிசை இங்கிலாந்துகு வலு சேர்க்கிறது. பவுலிங்கில் வோக்ஸ், டங்க் இருப்பதால் அந்த அணிக்கு பயமில்லை. எனவே, சொந்த மண்ணில் அடித்து ஆடக் கூடிய இங்கிலாந்தை திட்டமிட்ட ஆட்டத்தின் மூலமே இந்தியாவால் வீழ்த்த முடியும்.