IND vs NZ Match Highlights Indian Cricketer Virat Kohli in the list of historical ODI record-holders surpasses Sourav Ganguly record India vs New Zealand First ODI Match Highlights
விளையாட்டு

ODI : வரலாற்று சாதனை பட்டியலில் விராட் கோலி : ரசிகர்கள் வாழ்த்து!

Virat Kohli ODI Record Against New Zealand : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மற்றுமொரு வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

Baala Murugan

சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்த விராட் கோலி

Virat Kohli ODI Record Against New Zealand : வடோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி விளையாடினார். இதில், விளையாடுவதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

இதன் மூலம் இந்தியாவிற்காக அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பட்டியலில் கோலி முன்னேறியுள்ளார். சவுரவ் கங்குலி இந்தியாவிற்காக மொத்தம் 308 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருந்தார். ஞாயிற்றுக்கிழமை நேற்று (ஜனவரி 11) நியூசிலாந்துக்கு எதிராகக் களமிறங்கிய விராட் கோலியின் 309வது ஒருநாள் போட்டியாகும். இதில் கலந்து கொண்டு விளையாடிய அவர் சதம் அடிக்க தவறினாலும், அவர் ஒரு சாதனையை படைத்துள்ளார் என அவரது உலக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

டாப் 5 வீரர்கள்

இதன் மூலம் கங்குலியைப் பின்னுக்குத் தள்ளி, அதிக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்களின் பட்டியலில் விராட் கோலி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, ராகுல் டிராவிட் மற்றும் முகமது அசாருதீன் ஆகியோர் உள்ளனர்.

இதற்கிடையே, நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் தலைமை தாங்கினார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 2023 உலகக்கோப்பைக்குப் பிறகு இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக டாஸ் வென்று களத்தில் இறங்கியது.

முதல் போட்டியில் வெற்றியை பதிவு செய்த இந்தியா

இந்நிலையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி வரும் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடி இந்திய அவணிக்கு 306 ரன்கள் என இலக்கு நிர்ணயித்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய முன்னிலை வகிக்கிறது.

2-வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில்,300 ரன்களை சேசிங் செய்ததன் மூலம் அதிக முறை 300+ ரன்களை சேசிங் செய்த அணி என்ற சரித்திர சாதனையை இந்தியா படைத்துள்ளது. இந்திய அணி இதுவரை 20 முறை 300+ ரன்களை சேசிங் செய்து யாரும் தொடமுடியாத இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து (15 முறை) அணி உள்ளது. அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா (14), பாகிஸ்தான் (12), இலங்கை (11), நியூசிலாந்து (11) ஆகிய அணிகள் உள்ளன.