லார்ட்சில் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்
இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் 142 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை ஆடவருக்கான போட்டிகள் மட்டுமே நடந்த நிலையில், முதல் முறையாக நடைபெற்ற மகளிர் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து இந்தியா அணிகள் மோதின.
இந்தியா - இங்கிலாந்து பலப்பரீட்சை
10ம் தேதி தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச, இந்தியா முதல் இன்னிங்சில் 285 ரன் குவித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 170 ரன்னுக்கு சுருண்டதை அடுத்து, 115 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 341 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.
இந்திய வீராங்கனைகள் அசத்தல்
மந்தனா 70, யஸ்டிகா 113, ரிச்சா 50* ரன் விளாசினர். இதன்காரணமாக இந்திய அணி வலுவான நிலையை எட்டியது. இங்கிலாந்து பந்துவீச்சில் சோபி எக்லஸ்டோன் 5 விக்கெட் கைப்பற்றினார்.
இங்கிலாந்துக்கு கடின இலக்கு
457 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, 3ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 130 ரன் மட்டுமே எடுத்து தோல்வியின் பிடியில் சிக்கியது.
இந்திய அணி அபார வெற்றி
இந்த நிலையில், நேற்று நடந்த கடைசி நாள் ஆட்டத்தில் அந்த அணி 186 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி 270 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
அமி ஜோன்ஸ் 54, மேடி வில்லியர்ஸ் 26, சோபி எக்லஸ்டோன் 50 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் கணிசமாக ரன் குவிக்க தவறியதால், இங்கிலாந்து தோல்வியை தழுவ வேண்டியதாயிற்று.
இந்திய பவுலர்கள் அபாரம்
இந்திய பந்துவீச்சில் ஸ்நேஹ் ராணா 4, சாயாலி, கிராந்தி கவுட், தீப்தி ஷர்மா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
கிராந்திக்கு ஆட்டநாயகி விருது
முதல் இன்னிங்சில் 5, 2வது இன்னிங்சில் 2 என மொத்தம் 7 விக்கெட் வீழ்த்திய கிராந்தி ஆட்டநாயகி விருது பெற்றார்.
லார்ட்ஸ் மகளிர் டெஸ்டில் இமாலய வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய அணி வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
======