India advances to Super 8 after defeating Pakistan in a huge victory! source: Bcci
விளையாட்டு

பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி : சூப்பர் 8க்கு முன்னேறிய இந்தியா!

India defeats Pakistan by 61 runs in T20 World Cup 2026 : டி20 உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

S Kavitha

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா அணி

India defeats Pakistan by 61 runs in T20 World Cup 2026 : ஐசிசி டி 20 உலகக் கோப்பைத் தொடர் கொழும்புவில் நடைபெற்ற நிலையில், இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி பேட்டிங்

முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர்.

அதிரடியாக விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி ரசிகளுக்கு ஏமாற்றத்தையளித்தார்.

அரைசதம் விளாசிய இஷான் கிஷன்

அபிஷேக் சர்மாவின் டக் அவுட்டைத் தொடர்ந்து இஷான் கிஷனுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தைத் தொடர்ந்தார். இஷான் கிஷன் 27 பந்துகளில் அரைசதம் விளாசினார். மேலும் 40 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கேப்டன் சூர்யகுமார் யாதவ்

தொடர்ந்து திலக் வர்மாவுடன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர, பாகிஸ்தான் வீரர்களின் கடுமையான பந்து வீச்சின் போதும் இருவரும் நிதானமாக விளையாடினர்.

இருப்பினும் திலக்வர்மா 24 பந்துகளில் 25 ரன்கள் ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியாவும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தார்.

கேப்டன் சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இறுதியில் ஷிவம் துபே 27 ரன்கள், ரிங்கு சிங் 11 ரன்கள் எடுத்தனர்.

ஆட்டமிழந்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி 176 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் களமிறங்கிய நிலையில், 18 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா அபார வெற்றி

இதனால் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா

இதன் மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியா விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறியுள்ளது.

இந்த தொடரில் வருண் சக்கரவர்த்தி, ஐஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, அக்‌ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். திலக் வர்மா மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

ஆட்டநாயகன் விருது

மேலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் விளாசிய இஷான் கிஷன் இத்தொடருக்கான ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.