ஐசிசி ஒருநாள் தரவரிசை
ஐசிசி ஒருநாள் தரவரிசை வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் 3வது ஆண்டாக இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து சாதித்து வருகிறது. 2023ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, பாகிஸ்தானை முந்தி, முதலிடத்தை பிடித்தது.
இந்திய அணி 118 புள்ளிகள்
அதன்பிறகு, 2024, 2025 தரவரிசையிலும் முதலிடத்தில் நீடித்த இந்தியா, இந்த ஆண்டும் முதலிடத்தோடு அசத்தி இருக்கிறது. இந்திய அணி 188 புள்ளிகளை பெற்று இருக்கிறது.
டெஸ்ட் போட்டியில் சாதித்த இந்தியா
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில் சுப்மன் கில், ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோர் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாக இது பதிவாகியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு, ஐசிசி புதிய டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில்
தமிழக ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேப்டனாக முன்னின்று வழிநடத்திய சுப்மன் கில், 126 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் பேட்டிங் தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி 8-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இப்போட்டியில் அதிரடியாக 81 ரன்கள் விளாசிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், ஒரு இடம் முன்னேறி 12-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் டெஸ்டில் பேட்டிங்கில் ஆட்டமிழக்காமல் 52 ரன்களும், பந்துவீச்சில் இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆல்-ரவுண்டராக மிரட்டினார் வாஷிங்டன் சுந்தர். இந்த அபார ஆட்டத்தின் மூலம், ஐசிசி டெஸ்ட் ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் அவர் முதன்முறையாக டாப் 10க்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளார்.
முதலிடத்தில் ரவீந்திர ஜடேஜா
இப்போட்டியில் விளையாடாத போதிலும் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
பவுலர் தரவரிசை - முதலிடத்தில் பும்ரா
டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் பும்ரா வழக்கம் போல் முதலிடத்தில் நீடிக்கிறார். பேட்டிங்கில் இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹாரி ப்ரூக் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய அணி அடுத்ததாக ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
===================