India continues to top ICC T20 rankings  google
விளையாட்டு

ஐசிசி டி20 தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் நீடிப்பு! : 275 புள்ளிகள்...

மீண்டும் தொடர்ந்து ஐசிசி டி20 தரவரிசையில் இந்தியா முதலிடத்தை தக்க வைத்துள்ளனர்

Rohini

சர்​வ​தேச டி 20 அணி​கள் தரவரிசை பட்​டியல்

சர்​வ​தேச டி 20 அணி​கள் தரவரிசை பட்​டியலை ஐசிசி வெளியிட்டுள்​ளது. இதில் 3 முறை சாம்​பிய​னான இந்​திய அணி முதலிடத்தை தக்​க​வைத்​துக் கொண்​டுள்​ளது.

கடந்த மார்ச் மாதம் நடை​பெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்​திய அணி சாம்பியன் பட்​டம் வென்​றிருந்​தது கூறிப்பிடத்தக்கது

கணகிடப்பட்ட புள்ளிகள்

தொடர்ந்து மூன்​றாவது முறை​யாகக் கோப்​பையை வென்ற முதல் அணி என்ற சாதனையை​யும் இந்​தியா படைத்​தது. சமீபத்​திய டி20 அணி​களின் தரவரிசை​யானது,

மே 2025 முதல் விளை​யாடப்​பட்ட அனைத்​துப் போட்​டிகளை​யும் 100 சதவீத​மாக​வும், அதற்கு முந்தைய இரண்டு ஆண்​டு​களில் விளை​யாடப்​பட்ட போட்​டிகளை 50 சதவீத​மாக​வும் கணக்​கிடப்​பட்​டு அறிவிப்பு வெளியிடப்பட்டுளது

நடப்பு சாம்பியன் விவரம்

நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி 275 புள்ளிகளு​டன் முதலிடத்​தில் தொடர்​கிறது. அதற்கு அடுத்த இங்​கிலாந்து அணி 262 புள்​ளி​களு​டன் 2-வது இடத்​தி​லும், ஆஸ்​திரேலியா 258 புள்ளிகளுடன் 3-வது இடத்​தி​லும் உள்​ளன.

மற்ற அணிகளின் பட்டியல்

நியூஸிலாந்து (247), தென் ஆப்​பிரிக்கா (244), பாகிஸ்​தான் (240), மேற்கு இந்​தி​யத் தீவுகள் (233), வங்​கதேசம் (225), இலங்கை (221), ஆப்​கானிஸ்​தான் (220) ஆகிய அணி​கள் முறையே 4 முதல்​ 10-வது இடங்​களில்​ இருகிறது.

==============