India Defeats Australia in Third ODI Match in Sydney by 9 wickets Read IND vs AUS ODI Match Highlights in Tamil Image Courtesy : Jio Hot Star - India vs Australia ODI Match Highlights in Tamil
விளையாட்டு

IND vs AUS ODI : 9 விக்கெட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா!

India Defeats Australia in Third ODI Match in Sydney : மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சதம், கோலி அரைசதம் கைகொடுக்க, இந்திய அணி 9 விக்கெட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

Bala Murugan

தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

India Defeats Australia in Third ODI Match in Sydney : ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா தொடரை 2-0 என கைப்பற்றியது. இன்று மூன்றாவது, கடைசி போட்டி சிட்னியில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது.

ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் மிட்சல் மார்ஷ் (41), ஹெட் (29) ஜோடி ஆட்டத்தை தொடங்கி சுவாரசியமாக எடுத்து சென்றனர். பின்னர், ஷார்ட் 30, ரென்ஷா 56 ரன் எடுத்தனர். இதன் பின் இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டதால், ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு பெரும் சரிவு ஏற்பட்டது. இதனால், கேரி (24), கொனாலி (23) நிலைக்கவில்லை. மற்றவர்கள் ஏமாற்ற, ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவரில் 236 ரன்னில் ஆல் அவுட்டாகி முழுவதும் வெளியேறியது.இந்தியா சார்பில் ஹர்ஷித் ராணா 4, வாஷிங்டன் 2 விக்கெட் சாய்த்தனர்.

களமிறங்கிய இந்திய அணி

அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, கேப்டன் சுப்மன் கில் (24) ஜோடி வேகமான துவக்கம் தந்து அணியை வெற்றி பாதைக்கு அணிவகுத்தனர். ஆனால், நிலைக்கவில்லை, பின்னர் இவர்களை தொடர்ந்து களமிறங்கிய விரா் கோலி அரைசதம் அடித்தார். மறுபக்கம் மிரட்டிய ரோகித் ஒருநாள் அரங்கில் 33வது சதம் அடித்தார். இந்திய அணி 38.3 ஓவரில் 237/1 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இருப்பினும் தொடரை 1-2 என இழந்தது. ரோகித் (121), கோலி (74) அவுட்டாகாமல் இருந்தனர்.

அரட்டையில் நெட்டிசன்கள்

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்ற நிலையில், 3க்கு ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது. தொடர்ந்து 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, 3வது போட்டியான கடைசி போட்டியாக சிட்னியில் இந்தியாவுடன் களமிறங்கி தோல்வியுற்றது. அதிர்ஷடவசமாக, தனது திறமைமையை நிரூபித்த இந்திய அணி வீரர்கள் மூலம் 3 வது போட்டியை வெற்றி பெற்று, தொடரை கைவிட்டது. இதற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் வெற்றி கொண்டாடத்தில் இருந்தாலும், தொடரை கைவிட்டது குறித்து தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.