India delivered impressive performance at asian Para Games, winning a record number of medals source:thamizhalai,ai generated
விளையாட்டு

”30 தங்கம், 114 பதக்கங்கள்” : ஆசிய பாரா விளையாட்டில் இந்தியா புதிய சாதனை : பதக்கங்களை குவித்த வீரர், வீராங்கனைகள்!

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்று அசத்தி இருக்கிறது இந்தியா.

Kannan

India has delivered an impressive performance at the Asian Para Games, winning a record number of medals—more than ever before

para asian games india record metals ஆசிய பாராவிளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பாரா தடகள வீரர்கள் இதுவரை இல்லாத அளவில் 114 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

ஜப்பானில் பாரா விளையாட்டு போட்டி

மாற்றுத் திறனாளிகளுக்கான 5-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் நகோயாவில் கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. இதில் இந்தியா, சீனா, இலங்கை உள்ளிட்ட 45 நாடுகளை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

பதக்க வேட்டையில் இந்தியா

இந்தியா தரப்பில் மொத்தமாக 168 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இத்தொடரில் மொத்தமாக 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் என 114 பதக்கங்களை வென்று ஆசிய பாரா விளையாட்டு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா பதக்கங்களை தனதாக்கியுள்ளது.

தமிழக வீரர், வீராங்கனைகள் சாதனை

இதில் பங்கேற்ற தமிழத்தை சேர்ந்த சோலைராஜ் தர்மராஜ், நவீன் சிவகுமார், துளசிமதி முருகேசன், பேபி சஹானா உள்ளிட்டோர் பதக்கங்களை கைப்பற்றி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்தியாவிற்கு 4-ஆம் இடம்

பாரா விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதற்கான நிறைவுவிழா இன்று நடைபெறுகிறது. மொத்தமாக 45 நாடுகள் பங்கேற்ற இப்போட்டித்தொடரில் 427 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தை பிடித்துள்ளது.

சீனா முதலிடம், ஜப்பான் 2வது இடம்

185 பதக்கங்களுடன் ஜப்பான் இரண்டாம் இடத்தையும், 145 பதக்கங்களுடன் உஸ்பெகிஸ்தான் மூன்றாமிடத்தையும் அதற்கு அடுத்தபடியாக இந்தியா நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.

2023ம் ஆண்டு நடைபெற்ற பாரா விளையாட்டுப்போட்டிகளில் இந்தியா மொத்தமாக 108 பதக்கங்களை மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.

==================