India vs Australia 5th t20 Match 2025 Highlights in Tamil JioHotstar - IND vs AUS 5th T20 Match Highlights
விளையாட்டு

இந்திய ஆஸ்திரேலிய மோதல்- இடையில் வந்த மழையால் வெற்றி யாருக்கு?

India vs Australia 5th t20 Match 2025 Highlights in Tamil : இந்திய ஆஸ்திரேலிய இடையிலான டி 20 தொடரில் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.

Bala Murugan

இந்திய - ஆஸ்திரேலியா மோதல்

India vs Australia 5th t20 Match 2025 Highlights in Tamil : இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்றது.டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் களம் இறங்கியது. அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆட்டத்தின் 4ஆவது பந்தில் அபிஷேக் சர்மா பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் மேக்ஸ்வெல்லிடம் பந்தை அடிக்க அந்த கேட்சை மேக்ஸ்வெல் பிடிக்க தவறினார்.

சுப்கின் கில் பவுண்டரி

இதனால் அபிஷேக் சர்மா 5 ரன்னில் அவுட்டாவதில் இருந்து தப்பித்தார். 3ஆவது ஓவரில் கில் தொடர்ந்து நான்கு பவுண்டரி விளாசினார். 4ஆவது ஓவரில் அபிஷேக் சர்மா மீண்டும் அவுட்டாவதில் இருந்து தப்பினார். எல்லிஸ் பந்தில் துவார்சுயிஸ் கேட்ச் மிஸ் செய்தார். இதனால் 11 ரன்னில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்திய அணி 4.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்திருக்கும்போது, மழை வருவதற்கான அறிகுறி தென்பட்டது.

இந்திய அணி வெற்றி

எனவே, முன்னெச்சரிக்கை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் மழை பெய்ய தொடங்கிய நிலையில், இதனால் ஆட்டம் தொடர்ந்து நிறுத்தப்பட்டது. நீண்ட நேரமாக மழை பெய்ததால் போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் போட்டி கைவிடப்பட்டதாக நடுவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு, போட்டி கைவிடப்பட்டது. இதனால் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என வென்றது. இந்த தொடரில் அபிஷேக் சர்மா தொடர் நாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மழை வெற்றி

இந்தியாவின் இந்த வெற்றி மழையால் சாத்தியமானது என சிலர் சமூக வலைதளத்தில் கிசுகிசுத்து வரும் நிலையில், முன்னரே இந்த தொடரில் இந்தியா 2 வெற்றிகளை பதிவு செய்துதான் 5 ஆவது ஆட்டத்தில் களமிறங்கியுள்ளது, எனவும், எனவே இந்தியா இந்த ஆட்டத்தில் நிச்சயம் வெற்றி பெற்று இருக்கும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தனது கருத்துகளையும், மீம்ஸ் மற்றும் டெம்ளேட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.