India vs Namibia ICC Men's T20 World Cup 2026 Match Date, Time, Venue, Playing 11, Squads, Head-to-Head Full Details in Tamil Source : Jio Hotstar - ICC Men's T20 World Cup 2026 Match Highlights
விளையாட்டு

ICC T20 : நமீபி​யா​ vs இந்தியா: வெற்றியை வசப்படுத்துமா இந்தியா!

India vs Namibia T20 World Cup Match: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் ஏ பிரி​வில் இடம்பெற்றிருக்கும் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் இன்று நமீபி​யா​வுடன் மோதுகிறது.

Rohini

இன்றைய தொடர்

India vs Namibia T20 World Cup Match : ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரை இன்று இந்திய அணி நமீபி​யா​ அணியுடன் இரவு 7 மணிக்கு டெல்​லி​யில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்​தில் ஆட்டத்தில் களம் காணுகிறது

முதல் ஆட்டத்திலேயே வெற்றி கண்ட இந்தியா

சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி முதல் ஆட்​டத்​தில் அமெரிக்​காவை 29 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​ வெற்றியை தனதாக்கியது .

சூர்யகு​மார் யாதவ் 49 பந்துகளில் 84 ரன்​கள் விளாசி அணி​யின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்​திருந்​தார்.

அபிஷேக் சர்​மா பதிலாக சஞ்சு சாம்​சன்?

தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா வயிற்று தொற்று மற்​றும் வைரஸ் காய்ச்​சல் காரண​மாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட காரணத்தினால் இன்று போட்டியை எதிர்கொள்வது சந்தேகம் தான்.

இருப்பினும் அபிஷேக் சர்மாவிற்கு பதில் சஞ்சு சாம்​சன் விளையாட வாய்ப்பிருக்கலாம் என்று கூறப்படுகிறது .

இந்​திய அணியின் அடுத்த போட்டி

இந்திய அணியின் அடுத்த மோதலாக வரும் 15-ம் தேதி பாகிஸ்தானுடன் விளையாட உள்​ளது.

இதனால் அந்த போட்டிக்கு தயா​ராகும் வித​மாக இன்​றைய ஆட்​டத்தை இந்​திய அணி சிறந்த முறை​யில் பயன்​படுத்​திக் கொள்​ளக்​கூடும் என்று எதிர்பார்ப்பு நிறைந்துள்ளது .

நமீபியா அணி

தனது முதல் ஆட்டத்திலேயே நெதர்​லாந்​திடம் 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​திருந்​தது நமீபியா அணி.

அந்த அணி​யின் பேட்​டிங் வரிசை​யில் முதல் 6 இடத்​தில் களமிறங்​கும் வீரர்​களில் ஜேஜே ஸ்மித்தின் ஸ்டிரைக் ரேட் மட்​டுமே 140 ஆக உள்​ளது.

மற்ற 5 வீரர்களின் ஸ்டிரைக் ரேட் இன்​றைய கால டி20 பேட்​டிங்​ வரிசைக்​கு ஏற்ற வகையில் இல்லது என்பது குறிப்பிடத்தக்கது .