கிரிக்கெட் பயிற்சியாளர் பின்புலம்
India Wins South Africa in ICC Women's World Cup 2025 Final : பொதுவாக ஒரு விளையாட்டில் பயிற்சியாளர்கள் என்றால் அந்த விளையாட்டில் ஜாம்பவானாகத்தான் இருந்திருப்பார்கள். சிலர் வேண்டும் என்றால் அதில் எல்லாவற்றையும் தெரிந்திருப்பார்கள், அதனால் அந்த விளையாட்டின் அறிவின் ரீதியாக அவர்கள் பயிற்சியாளர் ஆக்கப்பட்டிருப்பார்கள். ஆனால், அந்த ஜாம்பவான் ரகம், அவர்கள் அந்த விளையாட்டில் அதில் செய்த சாதனையை நாம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும்.அப்படி இந்தியாவின் கிரிக்கெட் மகளிர் அணியின் பயிற்சியாளர் தான் அந்த ஜாம்பவான் அமோல் மஸும்தார், யார் இந்த அமோல் மஸும்தார் என விரிவாக பார்க்கலாம்.
அமோல் மஸும்தார் சாதனை
மும்பையை சேர்ந்த இவர், சிறுவயது முதல் அமோல் அனில் முஜும்தார்(Amol Muzumdar Coach) என அழைக்கப்பட்டார். சச்சினுக்கு பயிற்சியளித்தவர்தான் இவருக்கும் பயிற்சியாளர் என்று கூறப்படுகிறது. ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் 11,000க்கும் அதிகமான ரன்கள், 30 சதங்கள், முதல் ரஞ்சி போட்டியிலேயே 260 ரன்கள் என்ற உலக சாதனை, 60 அரை சதங்கள், தகர்க்க முடியாத சாதனைகள் பல என இவரின் சாதனை பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
மகளிர் அணியின் பயிற்சியாளர்
இந்திய கிரிக்கெட் மகளிர் அணி, தனது இறுதி ஆட்டத்தை தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதி தனது முதல் மகளிர் உலக கோப்பையை இந்தியாவிற்கு பெற்று தந்தது. இந்த வெற்றிக்கு எப்படி அணியின் வீரர்கள் காரணமோ, அதைப்போல் அந்த அணியின் பயிற்சியாளரான ஜாம்பவான் அமோல் மஸும்தார் ஒரு முக்கிய காரணமாவார்.
மகளிர் அணியின் பயிற்சியாளர் வாய்ப்பு
2014ஆம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அவர், இளையோர் கிரிக்கெட், ஐபிஎல் தொடர் உள்ளிட்டவற்றில் பயிற்சியாளராக களத்துக்கு வெளியிலிருந்து தொடர்ந்து பணியாற்றி வந்தார். இந்த நிலையில்தான், தற்போது 50 வயதாகும் இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வந்து சேர்ந்தது இந்திய மகளிர் அணிக்குப் பயிற்சியாளராகும் பொறுப்பு. இவர் தனது அணியின் சிஷ்யர்களிடம் அதாவது மாணவர்களிடம், தோற்றால் தேற்றுவது, திறமையை அறிந்து ஊக்கப்படுத்துவது என வெற்றி பாதைக்கு அழைத்து செல்வதே இவரின் ஆகச்சிறந்த ஒரு பெரும் கிரிக்கெட் பயிற்சி பக்குவமாக பார்க்கப்படுகிறது. இதுவே இன்றைய மகளிர் அணியின் முதல் வெற்றி கோப்பைக்கு வழி வகுத்தது என்றால் மிகையாகது.
மகளிர் அணியின் வெற்றி
இப்படி தனது பயிற்சியை சமார்த்தியமாக தனது வீரர்களுக்கு அளித்த அமோல் மஸும்தாரரும் ஒரு பெரு வெற்றியாளர் தான் என்று கூறும் வகையில், இந்த வெற்றி அமைந்திருக்கிறது. இதுவே, இந்தியாவின் முதல் கிரிக்கெட் மகளிர் வெற்றி உலக கோப்பை என்பதால், இதன் வெற்றி அளப்பெரியது.